Wednesday, January 14, 2009

எந்திரன்-தி ரோபோ விமர்சனம்

தலைவர் மீண்டும் ஜெயித்து விட்டார், சிவாஜி குதிரைன்னா, எந்திரன் பறக்கும் குதிரை, குசேலனுக்காக ரஜினிக்கு எதிரா கொடி பிடிச்ச எல்லோரும், அதே கொடியிலே பணத்தை அள்ளுவாங்க. அடுத்து நேரா விமர்சனம் தான்

கதை படி சூப்பர் ஸ்டார் ரஜினி அமெரிக்கா நாசாவிலே விண்வெளி ஆராட்சியாளர் பணியை செய்கிறார்,செவ்வாய் கிரகத்திற்கு சென்ற பீனிக்ஸ் விண்கலத்தை வடிவமைத்த குழுவில் பணி ஆற்றுகிறார்.அவரு தான் அதற்கு தலை நிர்மானி(chief architect).இரவு பகலா கஷ்டப் பட்டு திட்டம் வெற்றி பெற பாடு படுகிறார்.

விண்கலம் மேலே செல்லும் பொது அதிலே தொழில் நுட்ப கோளாறு ஏற்படுகிறது, அதை சரி செய்யும் முயற்சியில் அவருக்கும் ரஷ்யா ஆரட்சியாளருக்கும் தீர்வு கொடுப்பதில் தகராறு, அவன் இந்தியாவையும்,இந்தியர்களையும் தரக்குறைவாக பேசி விட, அதற்கு தீர்வு கொடுத்து விட்டு ரஷ்யாகாரனுக்கு தக்க பதில் அடி கொடுத்து விட்டு  வீட்டுக்கு செல்கிறார்.இந்தியாவை பற்றி பேசிய பேச்சிலே பாதித்த சூப்பர் ஸ்டார், விடுமுறை எடுத்து விட்டு சென்னைக்கு வருகிறார், வரும் பொது தன் சொந்த படைப்பான ரோபோவையும் எடுத்து கொண்டு வருகிறார்.வருகிற தலைவர் சென்னை திருவேல்லிகேணியிலே தங்குகிறார்.

ஐயர் ஆத்து மாமியின் மகளாக ஐஸ்வர்யாராய், அவளின் அக்காள் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் குடும்பமே தற்கொலை முடிவு எடுக்கிறார்கள்,ரஜினி தங்கும் இடம் அவர்கள் வீட்டின் அருகிலே இருக்கிறது. அவர்கள் உணவில்  விஷம்  கலந்து இருப்பதை ரோபோவின் மூலம் அறிந்து அவர்களை காப்பாற்றுகிறார்.

ஐஸ்வர்யா ராயின் ஊனமுற்ற சகோதரனுக்காக பெட்ரோல் இல்லாத தானியங்கி வண்டி ஒன்றை தயாரித்து கொண்டுகிறார், அது மிகவும் பிரபலமடைய தலைவரிடம் நிறைய பேர் வருகிறார்கள்,அவர்களுக்கு இலவசமாக அந்த தொழில் நுட்பத்தை கொடுக்கிறார்.தலைவரின் புகழ்அமெரிக்க அதிபரை விட வேகமாக வளர்கிறது.

ஐஸ்வர்யாராய் தலைவர் மீது காதல் வயப்படுகிறாள்,அப்படி வரலைன்னா தமிழ் சினிமாவிற்கே களங்கம்.இந்த நிலையில் தலைவரின் வளர்ச்சி பிடிக்காத உள்ளூர் மோட்டார் வாகன தாயாரிப்பாளர்கள் அவரை தீர்த்து கட்ட ரவுடிகளை ஏற்பாடு செய்கிறார்கள்.வில்லன் இல்லன்னா படம் எப்படி நகர முடியும்.தலைவர் படத்திலே சண்டை இல்லன்னா சக்கரை பொங்கலுக்கு உப்பு வச்சி சாப்பிடுற மாதிரி இருக்கும், ரவுடிகளுக்கு ஒரு காட்டு காட்டுகிறார் ரோபோவின் உதவியோடு, கொஞ்ச நாள்ல சண்டை காட்சி திருட்டு தனமா வெளியே வரும் அதனாலே அதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை

இதற்கிடையில் நாசாவின் அணு ரகசியங்கள் திருட்டு போகின்றது, அந்த பழி தலைவர் மேலே விழுகிறது,தலைவர் விடுமுறையில் சென்னையில் இருப்பதை அறிந்து கொண்டு அவரை கைது செய்ய அமெரிக்கா துப்பறியும் அதிகாரிகள் இந்தியா வருகிறார்கள்.

மத்திய அரசாங்கத்திலே வேலை பார்க்கும் அதிகாரி,உள்ளூர் வாகன தயாரிப்பாளரிடம் மத்திய அரசுக்கு வந்த ரகசிய உத்தரவை தெரிவிக்கிறார். சந்தப்பத்தை பயன் படுத்தி உள்ளூர் வில்லன், உள்ளூர் பத்திரிக்கைகள்,தொலை காட்சி நிறுவனங்கள் மூலமாக அந்த செய்தியை பிரபலப்படுத்துகிறார், செய்திகளில் அவர் சர்வதேச குற்றவாளியாக சித்தர்க்கப்படுகிறது.உண்மை என நம்பிய ஐஸ்வர்யாராய் வழக்கம் போல எல்லா கதாநாயகிகளும் செய்வது போலே அவரை விட்டு பிரிந்து விடுகிறார்.
மத்திய அரசாங்கம், சர்வதேச போலீஸ், அமெரிக்கா எப்.பி.ஐ தேடுவதோடு இடைவேளை.

(டீ,காபி குடிக்க போறவங்க போயிட்டு வாங்க)

இரண்டாவது பாதியில் தனக்கு எதிரான சதியை முறி அடித்து, ஐஸ்வர்யாராயும் கை பிடிப்பதே( படத்துக்காக) மீதி கதை.இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலே முதலில் ரஜினியை இழிவு படுத்திய நாசாவிலே ரஜினியை இழிவு படுத்திப் பேசிய ரஷ்ய  நண்பரிடன் இருந்து மின்-அஞ்சல் வருகிறது, அவன் விடுமுறைக்காக மேக்ஸ்சிகோ சொன்று இருப்பதாகவும், அவனை உடனடியாக வந்து பார்க்கும் படி மெக்சிகோ விலாசத்தை அனுப்புகிறார், அவனை தேடி மெக்சிகோ செல்கிறார் ரஜினி, ரோபோவின் உதவியுடன் சென்னை விமான நிலையத்தில் நுழைந்து மெக்சிகோ சொல்கிறார்
அவரை தேடி அங்கு செல்லும் ரஜினி, அவரை யாரோ கொலை செய்து விடுகிறார்கள், அவர் இறக்கும் தருவாயில் அவரிடம் இருந்து சில உண்மைகளை தெரிந்து கொள்கிறார், இந்த கொலை பழியும் தலைவர் மீது விழுகிறது.

இது வரையில் வில்லன்களுக்கு ஓடி ஒழிந்த ரஜினி உண்மையை தெரிந்து கொண்டதால், அவனை தேடி செல்ல முடிவு எடுக்கிறார், முதலில் வில்லன் இருப்பிடம் தேடும் தலைவர் அவன் இந்தியாவிலே இருப்பது தெரிய வருகிறது, மீண்டும் ரோபோவின் உதவியால் சென்னைக்கு வருகிறார். சென்னையில் பழைய எதிரியும், புதிய எதிரியும் ஓன்று சேருகிறார்கள்(பழசு உள்ளுறு, புதுசு வெளியூரு).இருவரின் சதி திட்டங்களை முறியடித்து வெற்றி பெறுவதே இறுதி கட்டம்

பாடல்கள் இன்னும் கொஞ்ச நாள்ல இணைய தளத்திலே வலம் வரும், அதனாலே அதை பத்தி பேச வேண்டிய அவசியம் இல்லை.இன்னொரு முக்கியமான விஷயம் படத்திலே ரோபோ பேசுகிற எல்லாமே குத்து வசனம் தான், ஒன்னு இப்ப சொல்லுறேன், மீதி படம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தூங்கும் போது அடிச்சா கேடி, தூங்கிட்டே அடிச்சா கில்லாடி

பிரமாண்டம், பிரமிப்பு, திகைப்பு, விறுவிறுப்பு, ரஜினி கலந்து தரப்பட்ட உலகத்தரம் வாய்ந்த தமிழ் படம் எந்திரன். 

49 கருத்துக்கள்:

குடுகுடுப்பை said...

பொங்கல் ரிலீசா.போட்டுத்தாங்குங்க

பொங்கல் வாழ்த்துகள்.

கிரி said...

//தூங்கும் போது அடிச்சா கேடி, தூங்கிட்டே அடிச்சா கில்லாடி//

:-)))

குடுகுடுப்பை said...

ஒரு விளம்பரம்
குடுகுடுப்பை: வில்லு - ஒரு முன் பழமைத்துவ காவியம்.

RAMASUBRAMANIA SHARMA said...

UNMAIYILAYE NEENGA ENNA DIRECTOR SHANKARIN ASSOCIATE-A, IVVALAVU THELIVA SCREEN PLAY PATHIVU SEITHU IRUKIREERKAL...CASE ETHUM PODA MATANGALAE...COMEDEY'A OR SERIOUS'A
SUMMA PINRENGALE...

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))))))))

ராஜ நடராஜன் said...

வீட்டுப் பக்கம் வந்தேங்களேன்னு விசாரிச்சிட்டுப் போகலாம் என வந்தேன்.ஈழம் மீண்டும் ஒரு பார்வை பதிவு தமிழ் மணத்தில் ஒட்டும்போது ஏதோ கோளாறு செய்யுது.நீங்க பதிவை எங்கிருந்து பு(ப)டிச்சீங்கன்னு சொன்னா வசதியா இருக்கும்.

அப்புறம் இயந்திரன் உங்க ஊர்ல ரிலீஸாயிடுச்சா:)

S.R.Rajasekaran said...

\\\உலகத்தரம் வாய்ந்த தமிழ் படம்\\\\

ரஜினி அமெரிக்கா ,இந்தியான்னு அலயுரதுனால இது உலகத்தரம் வாய்ந்த படம்ன்னு நினைக்கிறேன்

S.R.Rajasekaran said...

\\\தூங்கும் போது அடிச்சா கேடி, தூங்கிட்டே அடிச்சா கில்லாடி\\\

இது பன்ச் டயலாக்-ஆ!

S.R.Rajasekaran said...

ஷங்கர் மட்டும் இத படிச்சாருன்னா உன்மேல் கேஸ் போடுறது உறுதி

பழமைபேசி said...

த‌ள‌ப‌தி நீங்க‌ க‌ல‌க்குங்க‌...

பழமைபேசி said...

குடுகுடுப்பையாருடைய விளம்பரத்துக்கு போட்டி விளம்பரம்! இஃகி!இஃகி!!

வில்லு: ஒரு மாறுபட்ட பார்வையில்!

வில்லன் said...
This comment has been removed by the author.
வில்லன் said...

மொதல்ல வானரம் ஆயீரம்னு ஒரு படத்த பத்தி எழுதி ஊத்தி மூட வச்சாரு. நச்சர்றேயானுக்கு கிடைத்த ரெண்டாவது வெற்றி வில்லு. விவரம் அறிய குடுகுடுப்பை முன்னுட்டம் பாக்கவும்.

http://kudukuduppai.blogspot.com/2009/01/blog-post_11.html

அதேபோல இதுவும் நடந்து இந்திரன் ஊத்தி மூடி நசரேயன் வெற்றிபெற்று ஹக்ட்ரிக் சாதனை படைக்க வாழ்த்துக்கள். வாழ்க நசரேயன்.

பின்குறிப்பு.

அப்படியே எல்லா பெரிய தலை படங்களுக்கும் முன்னோட்டம் போட்டு ஊத்த வச்சா ரொம்ப புண்ணியமா போகும்.

அன்பார்ந்த நடிகர்களே,

எதாவது படத்த (எதிரியோட படத்த) ஊத்தி மூட வைக்கனும்னா நசறேயன முன்னுட்டோம் போட சொல்லவும். படம் கண்டிப்பா ஊத்தி மூடிரும். காரன்டீ. இல்லையேல் இந்த இணையதளத்த ஊத்தி மூடிடுவோம்.

வில்லன் said...

அடுத்த பஞ்ச் டயலாக்

தூங்கும் போது அடிச்சா கப்பு, தூங்கிட்டே அடிச்சா மப்பு.

நசரேயன் said...

/*வீட்டுப் பக்கம் வந்தேங்களேன்னு விசாரிச்சிட்டுப் போகலாம் என வந்தேன்.ஈழம் மீண்டும் ஒரு பார்வை பதிவு தமிழ் மணத்தில் ஒட்டும்போது ஏதோ கோளாறு செய்யுது.நீங்க பதிவை எங்கிருந்து பு(ப)டிச்சீங்கன்னு சொன்னா வசதியா இருக்கும்.*/
google reader ல இருந்து தான்

வில்லன் said...

ஆமா ரஜினி சங்கர் படம் பேரு "இந்திரன்" or "எந்திரன்"

அது சரி(18185106603874041862) said...

படத்தோட இல்லாத கதைய முன்கூட்டியே வெளியிட்டதுக்காக உங்க மேல மெகா டைரக்டர் பங்கர் கேஸ் போடப் போறாரு :0)))

அதெல்லாம் சரி, வழக்கமா பங்கரோட எல்லா படத்திலயும் கதா(இல்லா)நாயகன் காலேஜு கட்டுவாரே...இதுல கட்டலையா??

இராகவன் நைஜிரியா said...

ஹா...ஹா...

நல்லா கதை சொல்றீங்க...

அடுத்து எதாவது படம் இயக்கும் என்னம் இருக்கின்றாதா என்ன?

நசரேயன் said...

/*குடுகுடுப்பை said...
பொங்கல் ரிலீசா.போட்டுத்தாங்குங்க

பொங்கல் வாழ்த்துகள்.
*/

/*
குடுகுடுப்பை said...
ஒரு விளம்பரம்
குடுகுடுப்பை: வில்லு - ஒரு முன் பழமைத்துவ காவியம்.

*/
ஆமா பொங்கல் ரீலிஸ் தான்

நசரேயன் said...

/*
கிரி said...
//தூங்கும் போது அடிச்சா கேடி, தூங்கிட்டே அடிச்சா கில்லாடி//

:-)))
*/
வாங்க கிரி

நசரேயன் said...

/* RAMASUBRAMANIA SHARMA said...
UNMAIYILAYE NEENGA ENNA DIRECTOR SHANKARIN ASSOCIATE-A, IVVALAVU THELIVA SCREEN PLAY PATHIVU SEITHU IRUKIREERKAL...CASE ETHUM PODA MATANGALAE...COMEDEY'A OR SERIOUS'A
SUMMA PINRENGALE...
*/
காமெடி தான்

நசரேயன் said...

/*பழமைபேசி said...
த‌ள‌ப‌தி நீங்க‌ க‌ல‌க்குங்க‌...

January 14, 2009 12:53:00 PM EST

பழமைபேசி said...
குடுகுடுப்பையாருடைய விளம்பரத்துக்கு போட்டி விளம்பரம்! இஃகி!இஃகி!!

வில்லு: ஒரு மாறுபட்ட பார்வையில்!
*/
உங்களை விடவா

நசரேயன் said...

/*வில்லன் said...
மொதல்ல வானரம் ஆயீரம்னு ஒரு படத்த பத்தி எழுதி ஊத்தி மூட வச்சாரு. நச்சர்றேயானுக்கு கிடைத்த ரெண்டாவது வெற்றி வில்லு. விவரம் அறிய குடுகுடுப்பை முன்னுட்டம் பாக்கவும்.

http://kudukuduppai.blogspot.com/2009/01/blog-post_11.html

அதேபோல இதுவும் நடந்து இந்திரன் ஊத்தி மூடி நசரேயன் வெற்றிபெற்று ஹக்ட்ரிக் சாதனை படைக்க வாழ்த்துக்கள். வாழ்க நசரேயன்.

பின்குறிப்பு.

அப்படியே எல்லா பெரிய தலை படங்களுக்கும் முன்னோட்டம் போட்டு ஊத்த வச்சா ரொம்ப புண்ணியமா போகும்.

அன்பார்ந்த நடிகர்களே,

எதாவது படத்த (எதிரியோட படத்த) ஊத்தி மூட வைக்கனும்னா நசறேயன முன்னுட்டோம் போட சொல்லவும். படம் கண்டிப்பா ஊத்தி மூடிரும். காரன்டீ. இல்லையேல் இந்த இணையதளத்த ஊத்தி மூடிடுவோம்.

January 14, 2009 1:19:00 PM EST

வில்லன் said...
அடுத்த பஞ்ச் டயலாக்

தூங்கும் போது அடிச்சா கப்பு, தூங்கிட்டே அடிச்சா மப்பு.

வில்லன் said...
ஆமா ரஜினி சங்கர் படம் பேரு "இந்திரன்" or "எந்திரன்"
*/
ஒரு முடிவோடதான் களம் இறங்கி இருக்கீங்க போல.
தலைவர் விசயத்துல எல்லாம் வெற்றி தான்

நசரேயன் said...

/*அது சரி said...
படத்தோட இல்லாத கதைய முன்கூட்டியே வெளியிட்டதுக்காக உங்க மேல மெகா டைரக்டர் பங்கர் கேஸ் போடப் போறாரு :0)))

அதெல்லாம் சரி, வழக்கமா பங்கரோட எல்லா படத்திலயும் கதா(இல்லா)நாயகன் காலேஜு கட்டுவாரே...இதுல கட்டலையா??
*/
கேஸ் போட்டாலும் நல்லது தானே. இந்த படத்துல வீடு தாங்க கட்டுறாரு

நசரேயன் said...

/*இராகவன் நைஜிரியா said...
ஹா...ஹா...

நல்லா கதை சொல்றீங்க...

அடுத்து எதாவது படம் இயக்கும் என்னம் இருக்கின்றாதா என்ன?
*/
ஆமா தயாரிப்பாளர் தான் தேவை, மத்த எல்லாம் தயாரா இருக்கு

Mahesh said...

உலகப் புகழ் படங்களின் கதைகளை முந்தித்தரும் அண்ணன் 'நாசா'ரேயன் வாழ்க...

கதை அரைக்கும் இயந்திரம் எங்க வெச்சுருக்கீங்க? :))))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அண்ணோவ்....

இங்க விளம்பரம் போட்டா யாவாரம் பெருகுமாமே.. நாணும் கொஞ்சூண்டு விளம்பரம் போட்டுக்கரேன்.

எந்திரன் கதை மாறியது

எந்திரன் புத்தம்புதிய கதை

"உழவன்" "Uzhavan" said...

Ethu eppadiyo.. padam chumma pichikittu oodunganna :-)

வாழ்த்துக்கள் !

தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"

சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க

karisak kaattu ponnu .. Sl No: 41

http://tamiluzhavan.blogspot.com/2008/11/blog-post_13.html

Video: kozhi thinnum pasu .. Sl No: 18

http://tamizhodu.blogspot.com/2008/05/blog-post.html

kuruvi .. Sl No: 46

http://tamizhodu.blogspot.com/2008/04/blog-post_1936.html

நன்றியுடன்..
உழவன்

நசரேயன் said...

/*Mahesh said...
உலகப் புகழ் படங்களின் கதைகளை முந்தித்தரும் அண்ணன் 'நாசா'ரேயன் வாழ்க...

கதை அரைக்கும் இயந்திரம் எங்க வெச்சுருக்கீங்க? :))))
*/
எல்லாம் கனவுல வருது என்ன செய்ய

நசரேயன் said...

/*SUREஷ் said...
அண்ணோவ்....

இங்க விளம்பரம் போட்டா யாவாரம் பெருகுமாமே.. நாணும் கொஞ்சூண்டு விளம்பரம் போட்டுக்கரேன்.

எந்திரன் கதை மாறியது

எந்திரன் புத்தம்புதிய கதை
*/
தாராளமா போட்டுகோங்க

நசரேயன் said...

/* " உழவன் " " Uzhavan " said...
Ethu eppadiyo.. padam chumma pichikittu oodunganna :-)

வாழ்த்துக்கள் !

தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"

சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க

karisak kaattu ponnu .. Sl No: 41

http://tamiluzhavan.blogspot.com/2008/11/blog-post_13.html

Video: kozhi thinnum pasu .. Sl No: 18

http://tamizhodu.blogspot.com/2008/05/blog-post.html

kuruvi .. Sl No: 46

http://tamizhodu.blogspot.com/2008/04/blog-post_1936.html

நன்றியுடன்..
உழவன்
*/
கண்டிப்பா ஓட்டு போடுறேன்

பழமைபேசி said...

//நசரேயன் said...
கண்டிப்பா ஓட்டு போடுறேன்!
//

Mr.Kudukuduppai, note this point! He ditched us, you got it?

சந்தனமுல்லை said...

ROTFL!

//நிறைய பேர் வருகிறார்கள்,அவர்களுக்கு இலவசமாக அந்த தொழில் நுட்பத்தை கொடுக்கிறார்.// ஹைலைட் பண்ணா அப்புறம் முழுபோஸ்ட்டையும் போட வேண்டியதுதான்! செம ஜாலியா இருக்கு படிக்க!!

//தூங்கும் போது அடிச்சா கேடி, தூங்கிட்டே அடிச்சா கில்லாடி///

சான்சே இல்லை!! கலக்குறீங்க நசரேயன்!!

kajan said...

அப்பிடி எண்ணடத்தை கட்டாயம் பாக்கணும் என்று சொல்லுறிங்க

Anonymous said...

க‌ல‌க்குங்க‌...

நன்றி சந்தனமுல்லை

நசரேயன் said...

/* kajan's said...
அப்பிடி எண்ணடத்தை கட்டாயம் பாக்கணும் என்று சொல்லுறிங்க
*/
ஆமா கண்டிப்பா

நசரேயன் said...

/* கடையம் ஆனந்த் said...
க‌ல‌க்குங்க‌...
*/
நன்றிங்க

Poornima Saravana kumar said...

//தூங்கும் போது அடிச்சா கேடி, தூங்கிட்டே அடிச்சா கில்லாடி//

அட! அட!! அட!!!

Poornima Saravana kumar said...

சரியான கற்ப்பனை வளம்:) பெரிய எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது உங்களுக்கு..

நசரேயன் said...

/*PoornimaSaran said...
//தூங்கும் போது அடிச்சா கேடி, தூங்கிட்டே அடிச்சா கில்லாடி//

அட! அட!! அட!!!

January 16, 2009 12:18:00 PM EST

PoornimaSaran said...
சரியான கற்ப்பனை வளம்:) பெரிய எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது உங்களுக்கு..
*/
நன்றி பூர்ணிமாசரண்

புதியவன் said...

கதை நல்லாத் தானே இருக்கு
நீங்க திரைத்துறையில முயற்சி செய்யலாமே...

CA Venkatesh Krishnan said...

இதுமாதிரி யோசிச்சா இப்ப இருக்கற டைரக்டர்கள்லாம் எப்படி யோசிப்பாங்க? கடேசில இதுல ஏதாவது ஒரு வெர்ஷன் செட்டாயிடும்.

தேவன் மாயம் said...

எந்திரனை
பார்ட்
பார்டா
பிரிச்சு மேஞ்சிட்டிங்க நண்பரே!1

தேவா

Mahesh said...

அண்ணே... நம்ம கடைல ஃபாண்ட் ப்ராப்ளம் சரி பண்ணிட்டேன்

வில்லன் said...

"எந்திரன்: பெயரிட்டதின் பின்னணி"
பழமைபேசி பதிவில்
//நசரேயன் said...
அடுத்து கந்தசாமி க்கும் எழுதி போடுங்க, நான் பதிவு போட்ட உடனே
//

யோவ் நசரேயா என்ன அடுத்த பதிவும் பாம்பே படத்த பாத்துட்டு போட்ட காதல் கடிதம் இல்லையா. என்னவே ஏமாத்திட்டே போறீரு எங்கள.

Aero said...

thayayu seithu nee vimarsananm eluthathade....

thalaivar padatha pakkura inttrest kuranchirum pola iruku....

Anonymous said...

\\\get latest news abour Enthrian
from http:\\Roborajini.com\\\

TechShankar said...

Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

by
TS

டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்