Tuesday, January 13, 2009

ஐம்பதுன்னா என்ன?

ஐம்பதுன்ன என்ன, நாற்பத்தி ஒன்பதோட ஒன்னை ௬ட்டினாலும், ஐம்பத்தி ஒன்னிலிருந்து ஒன்றை கழித்தாலும் வரும், ஆட்டோ எடுத்து வர யாரும் அவசர படவேண்டாம், இது என்னோட ஐம்பதாவது பதிவு அதுக்கு தான் தலையை சுத்தி மூக்கை தொடுறேன்.

இந்த வேளையிலே என்னை பதிவுலகத்திற்கு அழைத்து வந்த என் நண்பர்கள், சத்தியா, முகவை மைந்தன் இருவருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன். அதனாலே இனிமேல ஒன்னுக்கு மூனு ஆட்டோ வேணும், ஏன்னா குற்றவாளியை விட அதை செய்ய தூண்டினவங்களுக்கும் தண்டனை கொடுக்கணும்.கல்லுரியிலே இருந்து என்னோடு நட்பு பயணம் செய்துவரும் இந்த நண்பர்களுக்கு நன்றி. குறிப்பாக முகவை மைந்தனும் நானும் சந்தித்த அனுபவம், எங்கள் கல்லூரி அனுபவங்கள் எல்லாம் எதிர் காலத்தில் பதிவாக வந்தாலும் வரும்

இவ்வளவு நாள் வரைக்கும் நான் எழுதுறதையும் ஒரு பொருட்டா மதிச்சு எட்டி பார்க்கும் நண்பர்களுக்கும், பின்னூட்டம் இடும் என்னைய நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

பதிவுலகத்திலே எனக்கு நிறைய புதிய நண்பர்கள் கிடைத்தாலும், ஒரே ஒருத்தங்க எதிரி ஆகிவிட்டாங்க, அது யாருன்னு சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது, உங்களுக்கே தெரியும்

இது நாள் வரைக்கும் ஒன்னும் பெரிசா எழுதி சாதிச்சது மாதிரி தெரியலை, இனிமேலும் சாதிக்க போறது இல்லைன்னும் தெரியும், அதுக்காக எழுதாம இருக்க முடியுமா?

கோடான கோடி வாசகர்களை(?) சும்மா விடலாமா ? அவர்களின் நலன் கருதி தொடர்ந்து எழுதுவேன்(என்ன பெருந்தன்மை) .

இந்த பதிவிலே ஒன்னும் இல்லைனாலும் இந்த பதிவு என் நண்பர்களுக்கு காணிக்கை, அவ்வளவு தான் இன்னைக்கு அடுத்த பதிவிலே சந்திக்கலாம்


25 கருத்துக்கள்:

குடுகுடுப்பை said...

வாழ்த்துகள்.
பொங்கல் வாழ்த்துகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்.

பழமைபேசி said...

வாழ்த்துகள், பொங்கல் வாழ்த்துகள்!!

சின்னப் பையன் said...

வாழ்த்துகள், பொங்கல் வாழ்த்துகள்!!

Anonymous said...

நசரேயன் வாழ்த்துக்கள் முதலில் 50-வது பதிவுக்கு.
நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். இனி கடக்க இருக்கும் அடுத்து 50 பதிவுகளில் இதை விட அதிக சுறுசுறுப்புடன் கொடுங்கள்.
இந்த தமிழ் புத்தாண்டு உங்கள் எழுத்துலக்கு ஒரு சிகரமாய் அமைய இந்த அன்பு சகோதரனின் அன்பு வாழ்த்துக்கள்.
சீக்கிரமாக 100-யை தொட இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்ககொள்கிறேன்.

S.R.Rajasekaran said...

50 அடிச்ச மாப்பிள்ளைக்கு 500 அடிச்சிட்டு வாழ்த்து சொல்றேன்வே.

!!!தமிழ் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!!!..............

முரளிகண்ணன் said...

50 ஆவது பதிவுக்கு ஆனந்த வாழ்த்துக்கள்.

விரைவில் 100 அடிக்கவும் வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

வில்லன் said...

//இது என்னோட ஐம்பதாவது பதிவு அதுக்கு தான் தலையை சுத்தி மூக்கை தொடுறேன்.//

நான் எதோ ஐம்பதாவது வயசுன்னு நெனச்சேன். ச!!!!!!!!!! உப்பு சப்பில்லாம போச்சே.

வில்லன் said...

//பதிவுலகத்திலே எனக்கு நிறைய புதிய நண்பர்கள் கிடைத்தாலும், ஒரே ஒருத்தங்க எதிரி ஆகிவிட்டாங்க, அது யாருன்னு சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது, உங்களுக்கே தெரியும்//

அது யாரு ஒரு எதிரி?????????. குடுகுடுப்பையா இல்ல உங்க தங்கமணியா சரியா வெளங்கலையே. விளக்கம் தேவை.

பழமைபேசி said...

//பதிவுலகத்திலே எனக்கு நிறைய புதிய நண்பர்கள் கிடைத்தாலும், ஒரே ஒருத்தங்க எதிரி ஆகிவிட்டாங்க, அது யாருன்னு சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது, உங்களுக்கே தெரியும்//

வலைஞர் தளபதிக்கு எதிரியா? அந்த தகிரியம் தங்கமணிய விட்டா யாருக்கும் கிடையாது... ஆனாத் தளபதி வாங்கிக் கட்டுறது, எதோ பதிவுலகத்துக்கு வந்தப்புறந்தான்னு அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு எல்லாம் புளுகக் கூடாது...
புளியங்குடில எங்களுக்கும் தெரிஞ்சவிக இருக்காகல்ல? இஃகிஃகி!

கபீஷ் said...

பொங்கல் வாழ்த்துகள்.

Anonymous said...

வாழ்த்துகள், பொங்கல் வாழ்த்துகள்

Anonymous said...

வாழ்த்துகள்

வில்லன் said...

// பழமைபேசி said...
//பதிவுலகத்திலே எனக்கு நிறைய புதிய நண்பர்கள் கிடைத்தாலும், ஒரே ஒருத்தங்க எதிரி ஆகிவிட்டாங்க, அது யாருன்னு சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது, உங்களுக்கே தெரியும்//

வலைஞர் தளபதிக்கு எதிரியா? அந்த தகிரியம் தங்கமணிய விட்டா யாருக்கும் கிடையாது... ஆனாத் தளபதி வாங்கிக் கட்டுறது, எதோ பதிவுலகத்துக்கு வந்தப்புறந்தான்னு அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு எல்லாம் புளுகக் கூடாது...
புளியங்குடில எங்களுக்கும் தெரிஞ்சவிக இருக்காகல்ல? இஃகிஃகி!//

நசரேயன் பதிவுலகத்துல யாரும் நிரந்தர எதிரியும் கெடையாது நிரந்தர ரசிகரும் இல்ல. எவ்ரிதிங் அண்டர் கண்ட்ரோல் பய் நசரேயன். எல்லாமே கற்பனை. ஹி ஹி ஹி.

வில்லன் said...

ஐம்பதாவது பதிவு எதோ நல்லா இருக்கும்னு பாத்தா சரியான மொக்கை. ஒரு பிரயோஜனமும் இல்லை. ஒரு மெசேஜ்ம இல்லை. சுத்த வேஸ்ட். விஜய் படம் வில்லு போல. எந்திரன் விமர்சனம் போட்டாவது கலக்கி இருக்கலாம்

வில்லன் said...

அனைவருக்கும் மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

அம்பதுன்னா அரைச்சது.... இல்லையில்லை அரைச் சதம்.

இனிய வாழ்த்து(க்)கள்.

(எங்கூரில் ஆட்டோ இல்லையேன்னு ரொம்பவே வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கேன்)

MSATHIA said...

வாழ்த்துக்கள் நண்பா.
அப்பிடியே சந்தடி சாக்குல எங்களுக்கும் ஆட்டோ அனுப்பறதுக்கும் ஏற்பாடு பண்ணீட்டு போயிறுக்கே. எவ்வளவு பெரிய மனசு.

அப்புறம் பொங்கல் வாழ்த்துக்கள்.

Mahesh said...

ஐம்பதுக்கு வாழ்த்துகள்.
பொங்கலுக்கு வாழ்த்துகள்.
மாட்டுப் பொங்கலுக்கு வாழ்த்துகள்.
காணும் பொங்கலுக்கு வாழ்த்துகள்.
இனி காணப்போகும் பொங்கலுக்கு வாழ்த்துகள்.
:)))) சீக்கிரம் 100 போட்ருங்க.

Poornima Saravana kumar said...

பொங்கல் மற்றும் அரை சத்தம் அடித்ததுக்கும் வாழ்த்துக்கள்:))

நசரேயன் said...

வாழ்த்துக்கள் பதிவு செய்த அனைவருக்கும் கோடான கோடி நன்றி

வில்லன் said...

யோவ் பெருசு (அதான் ஐம்பதுக்கு வாழ்த்துகள் சொல்லியாச்சுல்ல). எங்க வேற பதிவு ஒன்னையும் காணோம்.

Aero said...

50 blog eluthitta..treat ethuyum illaya da...

CA Venkatesh Krishnan said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நசரேயன் !

இத்தனை நாள் பிசியாக இருந்ததால் இதைக் கவனிக்கவேயில்லை:(

விரைவில் சதமடியுங்கள்!!

தமிழன்-கறுப்பி... said...

25 வது பின்னூட்டம் :)

வாழ்த்துக்கள் அண்ணன்...