Tuesday, November 11, 2008

சூழ்நிலை கைதி

திவால் ஆகி போனே லேஹ்மான் பிரதர்ஸ் ல கண்ணன் வேலை செய்து கொண்டிருந்த காலம், மதியம் மணி 1.30 பசி இல்லையானாலும் சாப்பிட போக வேண்டிய கட்டயாம்.

அலைபேசியில் மணி ஒலித்தது, எடுத்து விட்டு யாருக்கும் கேட்காத படி தமிழில் இதோ கிளம்பி விட்டேன் இன்னும் 5 நிமிசத்துல இருப்பேன், "ஐயம் ஸ்டார்டிங் நவ்" என சத்தமா சொல்லிட்டு கிளம்பினான், அவன் அலுவலகத்திற்கு பின்னால் இருக்கும் உத்சவ் உணவு விடுதியை அடைந்தான், சுற்றும் முற்றும் தேடினான், தான் சந்திக்க வேண்டிய பெண்ணை கண்டதும், அவளை பார்த்து கை அசைத்தான், அவளும் பதிலுக்கு கை அசைத்து விட்டு இவனை நோக்கி வந்தாள். புகை படத்திலே பார்த்ததை விட மிக அழகாக தோன்றினாள்

இருவரும் அறிமுகம் செய்து கொண்டும், சாப்பாட்டு தட்டுகளை எடுத்து விட்டு தேவையான உணவு வகைகளை எடுத்து விட்டு ஒரு மூலையில் அமர்ந்தார்கள்.அங்கே நிலவிய சிறு மவுனத்தை உடைத்த கவிதா
"இந்த ரெஸ்டாரன்ட்ல சாப்பாடு நல்லாவே இல்லை"
"ம்ம்.. என்ன சொன்னீங்க"
"ஒரு அழகான பெண் உங்க முன்னாடி இருக்கும் போதே உங்கள் கவனம் இங்கே இல்லையே?உங்க உள்ளத்தை கொள்ளை கொண்டு போன அந்த கள்ளி யாருன்னு நானும் தெரிஞ்சுக்கலாமா ?"

"நீங்க புகை படத்தை விட நேரில் அழகாக இருக்குறீர்கள், அதை சொல்லத்தான் யோசித்து கொண்டிருந்தேன்.நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை,உங்களை எனக்கு ரெம்ப பிடிச்சுருக்கு, உங்களை கல்யாணம் பண்ணுறதுல எனக்கு எந்த ஆட்சோபனையும் இல்லை,இனி முடிவு உங்கள் கையில்"
"ம்ம்..நான் எதிர்பார்த்ததை விட வித்தியாசமான ஆளாக தான் இருக்கிறீர்கள், நீங்க சொன்னது எல்லாம் உண்மையா? கற்பனை கலந்த உண்மையா?"
"நான் சொன்னது எல்லாம் அக்மார்க் உண்மை, உண்மை தவிர வேறோன்றும் இல்லை"
"நான் என் முடிவை நேத்தே எடுத்தாச்சு,நான் கல்யாணத்திற்கு பார்க்கிற கடைசி மாப்பிள்ளை நீங்கதான்"
எப்படி சொல்லுறீங்க ?
"என்னைய கட்டிக்கிட்டு கஷ்டப்படப் போறது நீங்கதான்."
கண்ணன் வயறும் மனசும் நிறஞ்சது அந்த கடைசி வார்த்தையிலே
"இருந்தாலும் நீங்க அடுத்த வாரம் எங்க வீட்டுக்கு வரவேண்டும், எங்க அப்பா,அம்மா எல்லோரும் உங்களை சந்திக்கணுமுன்னு விரும்புவாங்க"
"கண்டிப்பாக"
"உங்களுக்கு போன் பண்ணி சொல்லுகிறேன் அப்புறமா.."
சாப்பாட்டுக்கான பில்லை கண்ணன் கட்டியவுடன் இருவரும் கிளம்பினர், கண்ணன் அலுவலகத்திற்கு வந்து வேண்டா வெறுப்பாக வேலை யை தொடர்ந்தான்.
கவிதாவின் அலை பேசி ஒலித்தது, எடுத்து
"ஹலோ சொல்லுங்க அப்பா"
மறுமுனையில் கேட்ட கேள்விகளுக்கு ம்ம்... ஆமா.. இவைகளை தவிர ஏதும் மறுமொழி தெரிவிக்க வில்லை. கடைசியாய் பொறுமை இழந்தவளாய் "எத்தனை தடவை சொல்வது ஒரே விசயத்தை" அவள் முடிக்கு முன் மறுமுனை இணைப்பு துண்டிக்க பட்டு விட்டது
அடுத்த இரண்டு நாள்களுக்கு அலுவலக நிலைமை பற்றி யோசிப்பதிலே நேரம் செலவானது, மூன்றாம் நாள் கவிதாவிடம் இருந்து போன் வந்தது, வரும் ஞாயிற்று கிழமை அவளது வீட்டுக்கு வரச்சொன்னாள்.

சென்னை அப்பல்லோ மருத்துவ மனை வாசலில் நின்று கொண்டிருந்த நளினியின் அலைபேசி அலறியது, எடுத்தவள் "சொல்லுடி" என்றவள் சொல்லாமலே அழுதாள்,
மறுமுனையில் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில்களை சொன்னாள்."திங்கள் கிழமை ஆபரேஷன்" அடுத்தது
"இன்னும் ரெண்டு லச்சம் வேணும்" அடுத்தது
"எப்படி ஏற்பாடு பண்ணுவாய்" அடுத்தது
"என்னது நீ ஞாயிற்று கிழமை இங்க வாரியா?"
அதோடு மறு முனை தொடர்பு துண்டிக்க பட்டது .
ஞாயிறு கலையிலே சுறுசுறுப்பாக இருந்தான் கண்ணன்,அவன் கவிதாவை சந்திக்க அவள் வீட்டுக்கு போய் கொண்டு இருந்தான்.
அவளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க அவளிடம் தகவல் சொல்லாமலே போய்கொண்டுருந்தான், ரயில் நிலையத்தை வெளியே வந்த உடனே கவிதாவின் விலாசத்தை கை எடுத்துக்கொண்டு பார்த்தபோது அந்த வீடு எதிரிலே இருப்பதாய் அறிந்து கொண்டு அங்கெ போய் அழைப்பு மணியை அழுத்தினான்.
ஒரு ஸ்பானிஷ் தம்பதிகள் வெளியே சண்டை போட்டு கொண்டே வந்தார்கள். அவர்களை பார்த்து "நான் கவிதாவை பார்க்கணும்" என்று ஆங்கிலத்திலே கேட்டான். அவர்களுக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்திலே "இங்கு அப்படி யாரும் இல்லை" என்றார்கள்.
மீண்டும் ஒரு முறை விலாசத்தை காட்டியும் பலன் இல்லை, எங்கள் வீட்டிலே யாரும் வாடகைக்கும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, வெளியே வந்து கவிதாவின் அலைபேசியை தொடர்பு கொண்டான், அந்த எண் வாய்ஸ் மெயில் க்கு சென்றது. அதற்க்கு பிறகு ஒரு இருவது முறையாவது முயற்சி செய்திருப்பான். வெறுத்துபோய் வீட்டிற்க்கு திரும்பி வந்தான்
சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் நளினியும்,கவிதாவும்,அவளின் தந்தையும் பேசி கொண்டு இருந்தனர், கவிதா அப்பா
"நளினி ஆபரேஷன்னுக்கு வேண்டிய எல்லா பணத்தையும் கட்டியாச்சி, நாளைக்கு காலையிலே ஆபரேஷன், எல்லாம் நல்ல படியா நடக்கும், நீ ஒன்னும் கவலைப்படாதே "
"கவி நீ மட்டும் இல்லேன்னா" அதற்கு மேல பேச முடியலை நளினிக்கு.
"அமைதியா இரு எல்லாம் நல்ல படியா நடக்கும்".
நேற்றைய ஏமாற்றத்தை மறக்க முடியாமல், அலுவலகம் வந்து சேர்ந்தான் கண்ணன். வந்தவுடன் தான் தெரிந்து அலுவலகம் திவால் ஆகிவிட்டது என்பதையும் அவன் வேலை செய்யும் ப்ராஜெக்ட் ல இருந்து அனைவரையும் வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க, அவனுக்கு கொடுத்த அரை மணி நேரத்திலே அவனுக்கு வேண்டியதை எடுத்து விட்டு மறுபடியும் வீட்டு க்கு கிளம்பினான்.
போகும் வழியில் அலைபேசி அழைப்பு வந்தது, அதை எடுத்தவுடனே "கவிதா எங்க போனீங்க, நீ ஏன் போன் எடுக்கவே இல்லை ஞாயிற்று கிழமை."
மறுமுனையில் பேசியவர் தான் கண்ணன் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலே இருந்து பேசுவதாகவும், அவன் வங்கி கிரெடிட் கார்டு லே இருந்து சமார் 10000 ஆயிரம் டாலர் எடுத்து இருப்பதாகவும், பணம் அளவு ஓவர் ட்ரபிட் ஆனதினாலே அதை தெரிவிக்க போன் செய்ததாகவும் சொன்னார்
அதே நேரம் அப்பல்லோ மருத்துவ மனை சென்னை யிலே, நளினி கவிதாவிடம்
"ஆபரேஷன் நல்ல படிய முடிஞ்சது, இனிமேல் ஒன்னும் பிரச்சனை இல்லன்னு மருத்துவர் சொல்லி விட்டார், போன உயிர் திரும்பி வந்தது மாதிரி இருக்கு"
"நளினி நீ உங்க அப்பாகிட்ட இரு நான் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாரேன்" கிளம்பி கான்டீன் சென்றாள், அங்கு கவி அப்பா நின்று கொண்டு இருந்தார்.
"அப்பா இனி நளினிக்கு நல்ல காலம் தான்"
"உனக்கு எந்த காலம்", "நீ பண்ணின காரியத்திலே எனக்கு உடன் பாடே இல்லை"
"அப்பா,இது நானா எடுத்த முடிவு இல்ல சூழ்நிலை எடுத்தமுடிவுக்கு நான் கட்டு படவேண்டிய காட்டயாம். நளினி மாதிரி எவ்வளவோ பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளை களை நம்பி திருமணம் நிச்சயிக்க பட்டு ஏமாற்ற படுகிறார்கள். சட்டம் எல்லைகளை கடந்து சொல்ல முடியாமல் தவிக்கிறது. சட்டம் செய்ய முடியாதை மனு தர்மம் செய்ய வேண்டிய கட்டாயம். "
"நளினியோட அப்பா இந்த நிலைக்கு காரணமானவனை தண்டிக்க எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது, அதனாலே அவனை பின் தொடர்ந்து கல்யாண வலைக்கு வரவழைத்து அவனுடைய கிரெடிட் கார்டு நம்பர் யை என மொபைல் லில் படம் பிடித்தேன் ஹோட்டல் லிலே, அதை வைத்து அவன் பணத்தை திருடினேன்"
என்னதான் சட்டம் பேசினாலும் தன் மகளை நினைத்து பெருமை பட்டார்.
"அப்பா எனக்கு ரெம்ப பசிக்குது நான் ஏதாவது சாப்பிட வங்க போறேன்".அவள் போகிறதை எதோ புதிதாய் அவள் நடை பயில்வதை போல சந்தோசமாக பார்த்து கொண்டு இருந்தார்.

மறுநாள் நியூ யார்க் மருத்துவமனை யிலே கண்ணன் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தான், மருத்துவர்கள் அவன் நண்பர்களிடன் மிகுந்த மன அழுத்தத்தால் அவன் தன்னினலை மறந்து விட்டான்.
(முற்றும்)


27 கருத்துக்கள்:

பழமைபேசி said...

யெப்பா... கண்ணக் கட்டுது... சரி, அந்த ஓட்டையும் போட்டுட்டுப் போயிடலாம்.

குடுகுடுப்பை said...

எலே ரொம்ப நாள் கண்ணன் வேலை பண்ணியலோ.?

முரளிகண்ணன் said...

சூழ்னிலைக்கேற்ற கதை

Anonymous said...

கதையி கரு அருமை..
பாராட்டுக்கள்..
ஓட்டும் போட்டிருக்கேங்க :)

துளசி கோபால் said...

நல்லா வந்துருக்கு.

எழுதுனவுடன் நாலைஞ்சுமுறை வாசிச்சுப் பார்த்துட்டு, அங்கங்கே இருக்கும் சொற்களைக் கவனிச்சுச் சரிபண்ணிப் போட்டீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்.

நசரேயன் said...

/*
யெப்பா... கண்ணக் கட்டுது... சரி, அந்த ஓட்டையும் போட்டுட்டுப் போயிடலாம்.
*/

தட்டுன எனக்கே கண்ணை கட்டும் போது, உங்களுக்கு கட்டாதா?

நசரேயன் said...

/*
எலே ரொம்ப நாள் கண்ணன் வேலை பண்ணியலோ
*/

அந்த அளவுக்கு திறமையும் அறிவும் என்கிட்டே இல்ல சாமி

நசரேயன் said...

/*சூழ்னிலைக்கேற்ற கதை*/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளிகண்ணன்

அமர பாரதி said...

ஒன்னும் சொல்ல வேண்டாம்னுதான் பாத்தேன். ஆனா முடியல... ரொம்ப அபத்தமா இருக்கு.

நசரேயன் said...

/*
கதையி கரு அருமை..
பாராட்டுக்கள்..
ஓட்டும் போட்டிருக்கேங்க :)

*/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தூயா

நசரேயன் said...

/*
நல்லா வந்துருக்கு.

எழுதுனவுடன் நாலைஞ்சுமுறை வாசிச்சுப் பார்த்துட்டு, அங்கங்கே இருக்கும் சொற்களைக் கவனிச்சுச் சரிபண்ணிப் போட்டீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்.
*/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துளசி டீச்சர், அடுத்த முறை எழுதும் போதும் நீங்க சொன்னதை கடை பிடிக்கிறேன்

நசரேயன் said...

/*
ஒன்னும் சொல்ல வேண்டாம்னுதான் பாத்தேன். ஆனா முடியல... ரொம்ப அபத்தமா இருக்கு.
*/
வாங்க அமர பாரதி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

S.R.Rajasekaran said...

கிரெடிட் கார்டு நம்பர்-i எனக்கும் கொஞ்சம் வாங்கி கொடுங்க ஆளுக்கு பாதி பாதி

நசரேயன் said...

/*
கிரெடிட் கார்டு நம்பர்-i எனக்கும் கொஞ்சம் வாங்கி கொடுங்க ஆளுக்கு பாதி பாதி
*/
அந்த நம்பர் யை தானே நானும் தேடிக்கிட்டு இருக்கேன்

குடுகுடுப்பை said...

ஒரு கொல வெறிக்கவுஜ எழுதுங்கண்ணே

நசரேயன் said...

/*
ஒரு கொல வெறிக்கவுஜ எழுதுங்கண்ணே
*/

ஆள் இல்லா கடைக்கு டீ ஆத்த நீங்க தான் வந்தீங்களா?

கவுஜ யை நினச்சாலே கொமட்டுது

Aero said...

Kudumpa Malar - la itha story-a sonna kandippa 150 rs..unaku thanda....

நசரேயன் said...

/*
Kudumpa Malar - la itha story-a sonna kandippa 150 rs..unaku thanda....
*/
150 C கொடுத்த போடலாம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

சூழ்நிலைக்கேற்ற கதை.

இப்படியும் செய்வாங்களா.

நசரேயன் said...

/*
சூழ்நிலைக்கேற்ற கதை.

இப்படியும் செய்வாங்களா.
*/
வங்க அமிர்தவர்ஷினி அம்மா.
நிறைய நடக்கிறது இந்த மாதிரி சம்பவங்கள்.
எனக்கு தெரிந்தே இரண்டு சம்பவங்கள் நடந்திருக்கு

Anonymous said...

figure kuda pogumpothu cash pay pannuna itha mathri prachanaikala thavi-irka mudiyuma?
-Bachelor

rapp said...

:):):)

rapp said...

ஆனா எனக்கு இதில் மாறுபாடு உண்டு.

rapp said...

//
எலே ரொம்ப நாள் கண்ணன் வேலை பண்ணியலோ
//

வழிமொழிகிறேன்:):):)

rapp said...

me the 25th:):):)

Anonymous said...

/*
நல்லா வந்துருக்கு.

எழுதுனவுடன் நாலைஞ்சுமுறை வாசிச்சுப் பார்த்துட்டு, அங்கங்கே இருக்கும் சொற்களைக் கவனிச்சுச் சரிபண்ணிப் போட்டீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்.
*/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துளசி டீச்சர், அடுத்த முறை எழுதும் போதும் நீங்க சொன்னதை கடை பிடிக்கிறேன்

கமெண்ட்ஸ்
============

ஹலோ

தப்பு இல்லாம எழுதுங்க இல்ல ஆசிரியை காதை திருகிறுவாங்க. ஆசிரியை படிக்காங்கன்ன தப்பில்லாம எழுதனும் சரியா. இல்ல பெஞ்ச் மேல ஏத்திருவாங்க

நசரேயன் said...

வாங்க ராப்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி