Monday, November 3, 2008

வலை பதிவால் சந்தித்தவைகள்

பொழுது விடிஞ்சு பொழுது போன, இதே வேலைய போச்சு, வீட்டுல என்ன நடக்கு, ஏதாவது வேணுமா, இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

ஏன் எல்லாம் நல்லா தானே போகுது.

அலுவலகத்திலே இருந்து வந்த உடனே கணனி முன்னாடி உக்கார்ந்து கிட்டா வீட்டுல செய்ய வேண்டிய வேலை எல்லாம் யாரு செய்வார்?

இல்லை இதெல்லாம் படிச்சுட்டு கருத்து சொல்லலைனா யாரும் சம்பளம் கொடுக்கமாட்டாங்களா?

நாங்க இணைய தளம் வழியா தமிழ் வளர்க்கிறோம், ஏன் உனக்கு பிடிக்கலையா?ரெண்டு மாசம் முன்னாடி வரைக்கும் திருட்டு தனமா எல்லா படத்தையும் டவுன்லோட் பண்ணி பார்க்கிறேன். நீங்க ஒரு தனி உலகத்திலே இருகீங்க, எங்களை பத்தி கவலை படறதே இல்லைன்னு சொன்ன. அதனாலே உங்களை எல்லாம் தொந்தரவு பண்ண ௬டாதுனு பதிவு எழுத ஆரமிச்சேன்

அதுக்கும் இதுக்கும் ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை .
நான் தெரியாம தான் கேட்கிறேன், வீட்டு வந்தா மக்க மனுசன்கிட்ட ஒரு நாலு வார்த்தை பேசனும்ன்னு தோணலையா?
நீ என்ன வேலை செய்த?

வீட்டுல இருக்க சின்னது என்ன பண்ணுது?
இப்படி ஏதாவது கவலை இருக்கா?
நான் ஒருத்தி மாடு மாதிரி கத்திகிட்டு இருக்கிறது காதிலே விழுதா?

ஹும் .. என்ன சொன்ன?

ஹும்.. சோத்துக்கு உப்பு இல்லன்னு சொன்னேன்.இப்ப நீங்க எழுந்து வரலை, நான் கம்ப்யூட்டர் யை ஆப் பண்ணிடுவேன் .

சரி சொல்லு கேட்கிறேன், என்ன பிரச்சனை உனக்கு?

நீங்க குடும்பம் நடத்துற லட்சனம் இதுதானா?வீட்டுல காய்கறி இல்லை, அரிசி இல்லை, துணி துவைக்க வில்லை, பாத் ரூம் கழுவலை இதெல்லாம் யாரு செய்ய?

ஏன் எல்லாம் காலி ஆகிடுச்சா?

நாம கடைக்கு போய் ரெண்டு மாசம் ஆச்சு, போனாதானே எல்லாம் வங்க முடியும். நீங்க கம்ப்யூட்டர் கழுத்தை கட்டி கொண்டு கிடந்தால், நான் என்ன செய்ய முடியும்?

உங்களுக்கு ஆபீஸ் ல சம்பளம் இதுக்கு தான் கொடுக்கிறார்களா?

இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும், யாரு இந்த வீட்டுல இருக்கனுமுன்னு, நானா இந்த கம்ப்யூட்டர் யா?

ஏன் இப்படி கொலை வெறி கோபத்திலே இருக்க இப்ப, நான் எதோ கொலை குத்தம் பண்ணின மாதிரி கேள்வி கேட்குற?

எனக்கு வார ஆத்திரத்திலே என்ன செய்யணுமுன்னு தெரியலை, உங்களை மாதிரி தமிழ்ல எழுதுற எல்லோருமே இப்படி குடும்பத்தை கவணிக்காம தான் இருக்காங்களா?

இந்த கேள்விக்கு மட்டும் என்கிட்டே பதில் இல்லை

என்னவோ நான் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் ஒன்னு விடாம பதில் சொல்லி தவிச்சுட்டீங்க.

நீ ரெம்ப சூடா இருக்க, சுட சுட ஒரு காபி கொடு, குடிச்சுகிட்டே பேசுவோம்.

வீட்டுல பால், சர்க்கரை எல்லா தீர்ந்து ரெண்டு வாரம் ஆச்சு, உங்க பாணியிலே சொன்ன சரக்கு தீர்ந்து போச்சு .இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும். யாரு முக்கியமுன்னு நானா? கம்ப்யூட்டர்யா ?

வர வர உனக்கு எது ௬ட போட்டி போடுறதுன்னு ஒரு வரம்பே இல்லாம போச்சு, அது ஒரு வாயில்லா பூச்சி.

கம்ப்யூட்டர் ரால நான் தான் வாயில்லா பூச்சி ஆகிவிட்டேன்.ஹலோ நான் இங்க பேசிகிட்டு இருக்கேன், மறுபடியும் அங்கே என்ன பாத்து கிட்டு இருகீங்க உங்களை... ( கன்னம் இரண்டியும் பிடித்து கிள்ளு, தலை முடியை இழுத்து ஆட்டு, இவ்வளவும் பண்ணி மடி கணினியை யும் ஆப் செய்து விட்டாச்சு)

64 கருத்துக்கள்:

விஜய் ஆனந்த் said...

:-))))....

வீட்டுக்கு வீடு வாசப்படி!!!!

// ( கணத்திலே இரண்டியும் பிடித்து கிள்ளு, தலை முடியை இழுத்து ஆட்டு, இவ்வளவும் பண்ணி மடி கணினியை யும் ஆப் செய்து விட்டாச்சு) //

இந்த வாக்கியத்தில் censor பண்ணப்பட்ட விஷயங்கள் எதுவுமில்லையென முழுமனதாக நம்புகிறேன்....

:-)))....

குடுகுடுப்பை said...

ஆகா, என் வீட்டு ரகசியத்தை இப்படி போட்டு உடைச்சிட்டிரே

பழமைபேசி said...

நசரேயன், எல்லா மட்டைகளும் ஒரே குட்டைலதான்னு சொல்லுறீங்க அப்ப?

:-o)

முரளிகண்ணன் said...

same blood.

here, direct shut down (ups switsh off)

T.V.ராதாகிருஷ்ணன் said...

இதைத்தான் வீட்டுக்கு வீடு வாசல்படின்னு சொல்றாங்களோ...? :-)))

பெருசு said...

அந்தக் கொட்டாயிலயும் அதே படந்தானா.

(டப்பிங் படமா கூட இருக்கலாம்)

நசரேயன் said...

/*
:-))))....

வீட்டுக்கு வீடு வாசப்படி!!!!

// ( கணத்திலே இரண்டியும் பிடித்து கிள்ளு, தலை முடியை இழுத்து ஆட்டு, இவ்வளவும் பண்ணி மடி கணினியை யும் ஆப் செய்து விட்டாச்சு) //

இந்த வாக்கியத்தில் censor பண்ணப்பட்ட விஷயங்கள் எதுவுமில்லையென முழுமனதாக நம்புகிறேன்....

:-)))....

*/
பண்ண முடியாம தானே எழுதுறேன்

நசரேயன் said...

/*
ஆகா, என் வீட்டு ரகசியத்தை இப்படி போட்டு உடைச்சிட்டிரே
*/
ஒ.. அங்கேயும் அப்படிதானா

நசரேயன் said...

/*
நசரேயன், எல்லா மட்டைகளும் ஒரே குட்டைலதான்னு சொல்லுறீங்க அப்ப?

:-o)
*/
நீங்க சொன்ன சரியாதான் இருக்கும்

துளசி கோபால் said...

//எனக்கு வார ஆத்திரத்திலே என்ன செய்யணுமுன்னு தெரியலை, உங்களை மாதிரி தமிழ்ல எழுதுற எல்லோருமே இப்படி குடும்பத்தை கவணிக்காம தான் இருக்காங்களா?//

அதெப்படிங்க? எதோ ஆக்குறதை ஆக்கிட்டு தமிழ்ச்சேவை பிழிய வந்துருவொம்லெ!

பழமைபேசி said...

வாக்களிப்பதை வாடிக்கையாகக் கொள்ளாத‌ வட அமெரிக்க வலைஞர் தளபதிக்குக் கண்டனங்கள்!

Anonymous said...

இப்படியெல்லாம் வேறு நடக்கின்றதா?!! பாவம் அவங்க வேலையை செய்திட்டு கணனி பக்கம் வந்திடுங்க.. ;)

[என்ன இருந்தாலும் பெண்களுக்கு தானே ஆதரவு தர முடியும்] கிகிகி

நசரேயன் said...

:-)))
வங்க கிரி, என்ன செய்ய எல்லா என் கஷ்ட காலம்

நசரேயன் said...

/*same blood.

here, direct shut down (ups switsh off)
*/
யான் பெற்ற இன்பம் உங்களுக்குமா?
ரெம்ப சந்தோசம்

நசரேயன் said...

/*
இதைத்தான் வீட்டுக்கு வீடு வாசல்படின்னு சொல்றாங்களோ...? :-)))
*/

நிறைய விட்டுல என்னையே மாதிரி தான் இருக்கு போல தெரியுது

நசரேயன் said...

/*
அந்தக் கொட்டாயிலயும் அதே படந்தானா.

(டப்பிங் படமா கூட இருக்கலாம்)
*/

வங்க பெருசு..எல்லா தியேட்டர் லையும் நம்ம படம் தான்

நசரேயன் said...

/*//எனக்கு வார ஆத்திரத்திலே என்ன செய்யணுமுன்னு தெரியலை, உங்களை மாதிரி தமிழ்ல எழுதுற எல்லோருமே இப்படி குடும்பத்தை கவணிக்காம தான் இருக்காங்களா?//

அதெப்படிங்க? எதோ ஆக்குறதை ஆக்கிட்டு தமிழ்ச்சேவை பிழிய வந்துருவொம்லெ!
*/
வங்க துளசி கோபால் அம்மா, உங்களுக்கு தெரியுது என் நிலைமை, தெரிய வேண்டியவங்களுக்கு தெரியலையே?

நசரேயன் said...

/*இப்படியெல்லாம் வேறு நடக்கின்றதா?!! பாவம் அவங்க வேலையை செய்திட்டு கணனி பக்கம் வந்திடுங்க.. ;)

[என்ன இருந்தாலும் பெண்களுக்கு தானே ஆதரவு தர முடியும்] கிகிகி
*/
வாங்க தூயா
இப்போதைக்கு நீங்க சொன்ன மாதிரி தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு இருக்கு

நசரேயன் said...

/*
அண்ணே உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கொக்கி போட்டுள்ளேன்..
வந்து நிதானமாக மாட்டிக்கொள்ளவும்..
விபரங்களுக்கு என்னுடைய பதிவை பாருங்களேன்..
http://urupudaathathu.blogspot.com/2008/11/blog-post.html

*/
வாங்க தலைவரே, சீக்கிரம் வாரேன்

S.R.Rajasekaran said...

மாபில நீ கடைசியா பூரி கட்டயல அடி வாங்கினது என்னக்கு தெரியாதுன்னு நெனசியா! பார்ரா அடி வாங்கலன்னு எவ்வளவு அருமையா மழுப்புரான்னு -ஹிம் நாங்க சிங்கம்ல
(அய்யோ, அம்மா, அடிக்காதடி நீ வாங்கிட்டு வர சொன்ன பலசரக்கு அப்பவே வாங்கிட்டு வந்துட்டேன்)

நீயே என்னை காட்டி கொடுத்திடுவ போல இருக்கே

மோகன் கந்தசாமி said...

ஹா ஹா! உங்களெல்லாம் நெனச்சா எனக்கு பாவமா இருக்கு! :-)))))

rapp said...

me the 25th:):):)

rapp said...

இதெல்லாம் இன்னும் ஆறுமாசத்தில் சரியாகிடும்னு மூத்த பதிவர்கள் சொல்லுறாங்க:):):)

rapp said...

இல்லைன்னா மட்டும், நீங்க என்னமோ பயங்கரமா வீட்ல பொறுப்பாவா இருக்கப் போறீங்க:):):)

நசரேயன் said...

/*
ஹா ஹா! உங்களெல்லாம் நெனச்சா எனக்கு பாவமா இருக்கு! :-)))))
*/
நீங்களும் சீக்கிரமா எங்க ஜோதியில ஐக்கியம் ஆகணுமுன்னு வேண்டுகிறேன்

நசரேயன் said...

/*இதெல்லாம் இன்னும் ஆறுமாசத்தில் சரியாகிடும்னு மூத்த பதிவர்கள் சொல்லுறாங்க:):):)
*/
ஆறு வருசமானாலும் முடியாது போல தெரியுது

நசரேயன் said...

/*
இல்லைன்னா மட்டும், நீங்க என்னமோ பயங்கரமா வீட்ல பொறுப்பாவா இருக்கப் போறீங்க:):):)
*/

இப்படி உண்மைய சபையில போட்டு உடைச்சி மானத்தை வாங்கிடீன்களே :)

Aero said...

Tamil la kappathormnu kudumpatha kappathama iruthuratah da....

நசரேயன் said...

/*
Tamil la kappathormnu kudumpatha kappathama iruthuratah da....
*/
நீ சொல்லுறதையும் கேட்டுகிறேன்

புதுகை.அப்துல்லா said...

ஹி...ஹி....ஹி...

வேற என்னத்த சொல்ல... :)))))

புதுகை.அப்துல்லா said...

34

புதுகை.அப்துல்லா said...

ஹையா மீ த 35

பழமைபேசி said...

//வீட்டுக்கு வீடு வாசப்படி//

வாழ்க்கைங்ற வீட்டுக்கு, ஆன்மீகங்ற வீடு வாசற்படி.
த‌ர்ம அடிங்ற வீட்டுக்கு, வ‌லைப்பூ பின்னுற‌து வாச‌ற்ப‌டியா?!

Anonymous said...

37

Anonymous said...

38

Anonymous said...

39

Anonymous said...

மீ த 40

Anonymous said...

41

Anonymous said...

42

Anonymous said...

43

Anonymous said...

44

Anonymous said...

45

Anonymous said...

46

Anonymous said...

47

Anonymous said...

48

Anonymous said...

49

Anonymous said...

மீ த 50

நசரேயன் said...

/*ஹி...ஹி....ஹி...

வேற என்னத்த சொல்ல... :)))))
*/

வங்க புதுகை.அப்துல்லா அண்ணாச்சி
வருகைக்கு நன்றி

நசரேயன் said...

/*
//வீட்டுக்கு வீடு வாசப்படி//

வாழ்க்கைங்ற வீட்டுக்கு, ஆன்மீகங்ற வீடு வாசற்படி.
த‌ர்ம அடிங்ற வீட்டுக்கு, வ‌லைப்பூ பின்னுற‌து வாச‌ற்ப‌டியா?!
*/

இருக்கலாம், நீங்க சொன்ன சரியாத்தான் இருக்கும்

cheena (சீனா) said...

சரி சரி - இதெல்லாம் உள்ளது தான் - நாமளும் திருந்தப் போறது இல்ல - அவங்களும் வுடப் போறது இல்ல

பாக்கலாம்

நசரேயன் said...

/*சரி சரி - இதெல்லாம் உள்ளது தான் - நாமளும் திருந்தப் போறது இல்ல - அவங்களும் வுடப் போறது இல்ல

பாக்கலாம்
*/
முற்றிலும் மறுக்க முடியாத உண்மை சீனா ஐயா

நசரேயன் said...

கும்மி அடிச்சுட்டு போன அனானி ஐயாவுக்கும் வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் said...

//எனக்கு வார ஆத்திரத்திலே என்ன செய்யணுமுன்னு தெரியலை, உங்களை மாதிரி தமிழ்ல எழுதுற எல்லோருமே இப்படி குடும்பத்தை கவணிக்காம தான் இருக்காங்களா?

இந்த கேள்விக்கு மட்டும் என்கிட்டே பதில் இல்லை
//

அனேகமாக யாரிடமும் இதற்கு பதில் இருக்காது

:))

சூப்பர் !

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி அண்ணா

குப்பன்.யாஹூ said...

ellar veetulayum naatkalilum nadakkira urayaadal இது.

இது inayathala kaalm. இன்னும் ஐந்து வருடங்கள் இந்த mogam irukkum, அப்புறம் வேறு ஒரு mogam வரும் namakku.

kuppan_yahoo

நசரேயன் said...

/*
ellar veetulayum naatkalilum nadakkira urayaadal இது.

இது inayathala kaalm. இன்னும் ஐந்து வருடங்கள் இந்த mogam irukkum, அப்புறம் வேறு ஒரு mogam வரும் namakku.

kuppan_yahoo
*/

வாங்க குப்பன்_யாஹூ உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீங்க சொல்லுறது உண்மைதான்,காலம் மாறும் போது எல்லாம் மாறும்

மன்மதக்குஞ்சு said...

வலையுலகிலே கடந்த இரண்டாண்டுகளாக அவ்வபோது மேய்ந்து கொண்டிருந்தாலும், கடந்த இரண்டு மாதமாகத்தான் வலைப்பூவுலகை மேய ஆரம்பித்துள்ளேன். அதற்க்குள்ளாகவே தாங்கள் வீட்ல நடந்த சம்பாஷணைகளும் அதற்க்கு மற்ற வலைஞர்கள் வகைதொகையின்றி வழி மொழிந்ததும் எனக்கும் பொருந்துகிறது.
பி.கு: இந்த போஸ்ட்டுக்கு மும்மரமாக மறுமொழி டைப்படித்துக் கொண்டிருக்கும் போது எனது கணிணி திடீரென ஆஃப் ஆகிவிட்டது. (தங்கமணி தோளுக்கு பின்னாலிருனிந்து வேவு பார்த்துக்கொண்டிருப்பது தெரியாமல்). காரணம் புரிந்து கொண்டு அப்படியே பம்மி விட்டேன்.

முகவை மைந்தன் said...

என்னைப் போல் ஒருவன்!!!!

வாங்க மன்மதக்குஞ்சு
நமக்கு எதிரிகளை எங்கேயும் போய் தேடவே வேண்டாம்

நசரேயன் said...

/*என்னைப் போல் ஒருவன்!!!!*/
உனக்குமா அப்படி மாப்ள?

Anonymous said...

kalyanam panna niraya vela irukum pola iruka... vella pannalana adi vera villuma?
adi vangi romba kalam ayuduthu(schoola vangunathu)... ROMBA ROMBA KASTAM IRUKUM POLLYA...

Anonymous said...

இங்க நடந்த முழு கதையும் வரலியே. என்னனு தெரியல. நான் மீதி கதைய சொல்லிடுறேன். எதோ பக்கத்து வீடுகர்ணா இருந்ததால எனக்கு கொஞ்சம் உண்மை தெரியும்.

இது நடந்த அப்புறம் தலைவர் வீட்டுக்கு போனப்புறம் ப்லோக் எழுதுறது இல்ல. எல்லாம் ஆபீஸ்ல இருந்துதான். எந்த புன்னியவனோ சம்பளம் கொடுக்கான் ப்லோக் எழுத. வீட்டுல இருந்து எழுதினா அப்புறம் வெளில தான் படுக்கணும். கொஞ்சம் இமகினே பண்ணி பாருங்க. நியூயார்க் குளுருல வெளில படுத்தா எப்படி இருக்கும்னு.

நிலாமகள் said...

ஹேமாவிடமிருந்து வருகிறேன்...