Friday, October 17, 2008

தணிக்கை குழுவும்.தயாரிப்பாளரும்

தணிக்கை குழு : படம் நல்லா வந்திருக்கு, ஆனா ஒரு மூன்னு இடத்தை தவிர
தயாரிப்பாளர் : கோடி கோடிய கொட்டி படம் எடுக்கிற எங்களுக்கு தெரியாமா உங்களுக்கு தெரிஞ்ச அந்த மூன்னு இடம் எதுங்க?


தணிக்கை குழு : ஒரு இடத்துல கதாநாயகி கொசுவை அடிக்க மாதிரி இருக்கே, அது விலங்குகள் வன்முறை சட்டப்படி குற்றம்

தயாரிப்பாளர் : கொசுவை அடிக்காம கோவில் கட்டியா கும்பிடனும்

தணிக்கை குழு : அந்த கொசுவுக்கு மருத்துவ சான்றிதழ் வாங்கினீங்களா?

தயாரிப்பாளர் : ஐயா அந்த கொசு கடிச்சு, மலேரியா, சிக்கன் குனியா வந்து மண்டைய போடுற மனுசங்களுக்கு தான் இறப்பு சான்றிதழ் வாங்கணும்

தணிக்கை குழு : ச்சுச்சு.. குறுக்க பேசசக்கூடாது. எல்லாம் விதி, நாங்க விதி படிதான் நடப்போம்

தயாரிப்பாளர் : எல்லாம் எங்க தலை விதி, சரி அடுத்த குற்றம் என்னனு சொல்லுங்க

தணிக்கை குழு : கதா நாயகன் ஒரு காட்சியிலே தொடை தெரிய வேட்டிய மடிச்சு கெட்டிகொண்டு வாராரு அது ஆபாசமா இருக்கு

தயாரிப்பாளர் : நீங்க சொல்லுறதுதான் ரெம்ப ஆபாசமா இருக்கு, சண்டை காட்சியிலே வேட்டியை மடிச்சு கட்டாம எப்படி முடியும்?
கதாநாயகி நீச்சல் உடையிலே கன்னா பின்னா ன்னு வாறதை எல்லாம் கலாசார குத்து விளக்கா?

தணிக்கை குழு : ரெம்ப பேசுனீங்க.. படமே வெளியிலே வராத படி பண்ணிடுவேன்

தயாரிப்பாளர் : நீங்க செஞ்சாலும் ஆச்சரிய படுறதுக்கு இல்ல, நான் இனிமேல் வாய் திறக்கலை, நீங்க மேல சொல்லுங்க சாமீ

தணிக்கை குழு :அடுத்ததா கதாநாயகனும் கதா நாயகியும் முத்தம் கொடுக்கிற காட்சி ரெம்ப அவமானமா இருக்கு.அவன் கொடுக்கிற வேகத்தை பார்த்தால் கதாநாயகி குடல் அள்ளி வெளியே போட்டுருவான் போல இருக்கு

தயாரிப்பாளர் : வாயில நல்லா வந்துட்டு வடக்காம போகுது.. அவன் காதலிக்கு அவன் முத்தம் கொடுக்கான், நீங்க ஏன் வயத்து எரிச்சல் படுறீங்க?

தணிக்கை குழு : எல்லா விதி படிதான் நடக்கு,எப்படி எப்படி எல்லாம் முத்தம் கொடுக்கலாமுன்னு விதி முறைகள் இருக்கு.

தயாரிப்பாளர் : என்னவோ நியூட்டன் முன்றாம் விதி மாதிரி பேசுறீங்க

தணிக்கை குழு : காட்சிகளை மாத்த முடியுமா முடியாதா? முடியலனா நாங்க வெட்ட வேண்டியது வரும்

தயாரிப்பாளர் : என்னவோ கடை திறப்பு விழாவுக்கு ரிப்பன் வெட்டுற மாதிரி சொல்லுறீங்க, வடக்க போய் பாருங்க, ஆடை இல்லாம படம் எடுத்து இந்திய கலாசாரத்தை குப்பையிலே போடுறாங்க, உங்க விதி அங்க தூங்குதா? அதை எல்லாம் ஓகோ.. ஆகா.. புகழ்ந்து தள்ளுவீங்க. நம்ம ஊருக்கு வந்தா கண்ணகி அவங்க ஊருக்கு போன கோவலனா?

தணிக்கை குழு : ஹலோ ..

தயாரிப்பாளர் : இருவே பேசிகிட்டு இருக்கமுல்ல, தினமும் ஒரு லட்சம் மாடு,ஆடு, கோழி எல்லாம் வெட்டுராங்க காணாக் குறைக்கு மனுஷனையும் வெட்டுறாங்க. அவங்க எல்லாம் எந்த மருத்துவரிடம் சான்று வாங்குதாங்க,
பேசவந்துடீங்க.. மருத்துவ சான்று மண்ணாங்கட்டி சான்றுன்னு.
கொசுவை அடுச்சுட்டானு குய்யோ முய்யோனு கத்துற நீங்க, மாட்டை அடிக்கிற மாதிரி சண்டை காட்சியிலே மனுசங்களை புரட்டி எடுக்குறான் அதுஎல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா?

தணிக்கை குழு : உங்க வாயோட சேத்து முழு படத்தையும் வெட்டுறதா முடிவு பண்ணிட்டோம்


தயாரிப்பாளர் : ஐயா மானத்தை காக்க நிக்கும் மகராசன்களா , நான் இன்னும் முடிக்கலை, வேட்டியை கணுக்கால் வரை தான் மடிச்சு கட்டனுமுணா அவன் சேலை தான் உடுத்தனும்.கதாநாயகி கூட மழையில நினைஞ்சு அடி பாடுறான், அவ தொப்புள்ள மைதானத்துல விளையாடுற மாதிரி பம்பரம்,கோலி குண்டு விளைஆடுராங்க. தொப்புள்ள விளையாடலாம் வாயில விளையாடக் கூடதா?
தணிக்கை குழு : உங்க படத்தை எல்லாத்தையும் வெட்டப்போறோம், நீங்க வீட்டுக்கு போகலாம்.

தயாரிப்பாளர் : அப்படியே படம் வெளியில வந்தா, படம் எடுத்து நொந்து போன தயாரிப்பாளர்ல இருந்து விளக்கு பிடிகிறவர் வரைக்கும் வழக்கு போடுறாங்க.இதுக்கு அனுமதி கொடுத்த உங்க மேல யாரும் வழக்கு போடுகிறார்களா?

தணிக்கை குழு : நாங்க வெட்டனுமுனு முடிவு பண்ணியாச்சு . நீங்க போகலாம்.

தயாரிப்பாளர் : நீங்க வெட்டுறதுக்கு முன்னாடி, நான் வெட்ட வேண்டியதை வெட்டியாச்சு. கைபேசியில வார அழைப்புக்கு முதல்ல பதில் சொல்லுங்க, நான் சொல்ல வந்து புரியும் .

தணிக்கை குழு : (பேசி முடிந்ததும்...) இதெல்லாம் நீங்க ஏன் முதல்லே சொல்ல வில்லை, நாம இவ்வளவு நேரம் பேச வேண்டிய அவசியமே இருக்காது, உங்க படத்துக்கு "U" சான்றிதழ் கொடுத்து விடுகிறேன்.
(சான்றிதல் வாங்கி விடை பெரும் முன் )

தயாரிப்பாளர் : கைபேசியில பேசுனது உங்க வீட்டு சின்ன வீட்டு தங்கமணி இல்லை, நான் ஏற்பாடு பண்ணின பின்னணி நடிகை. எந்த மாட்டுக்கு எங்க புடிச்சா வலிக்கும்னு எனக்கும் தெரியும்.இனிமேல நான் இங்க வர முடியாது இப்பவே அரை ஆண்டி ஆகிட்டேன், படம் வந்த உடனே ஓட்டை ஆண்டி ஆகிடுவேன்.


8 கருத்துக்கள்:

குடுகுடுப்பை said...

நல்ல திருப்பம். ஆமா அந்த பின்னனி நடிகை யாரு?

தின்னவேலி கார தயாரிப்பாளரு பேரு என்னது.

Anonymous said...

ஓ... இப்படித்தான் படத்திற்கெல்லாம் சர்டிபிகேட் கொடுக்கிறாங்களா..

Me the Second

நசரேயன் said...

நன்றி குடுகுடுப்பை ஐயா..

அந்த வீணாப்போன தயாரிப்பாளர் எங்க ஊருல மளிகை கடையும்
பின்னணி நடிகையும் வாய்ப்பு கேட்டு சென்னையில அலையுறதா கேள்வி

நசரேயன் said...

/*ஓ... இப்படித்தான் படத்திற்கெல்லாம் சர்டிபிகேட் கொடுக்கிறாங்களா */
வருக்கைக்கு நன்றி ராகவன்..

இப்படியெல்லாம் நடந்தாலும் ஆச்சரியம் இல்லை

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))

நசரேயன் said...

:-))))
வருகைக்கு நன்றி ஐயா

Anonymous said...

thanikai kulu la work panra ellaruukum sinna vidu irukunu solriya...

intha post-a vanagaluku anupuren...
mana nasta valaku poduvanga...sikkiram ready ayuda..court-ku p[oganum...

நசரேயன் said...

/*thanikai kulu la work panra ellaruukum sinna vidu irukunu solriya...

intha post-a vanagaluku anupuren...
mana nasta valaku poduvanga...sikkiram ready ayuda..court-ku p[oganum...
*/
கனவுல தென்பட்டதுக்கும் கைதா?
ம்ஹும்.. என்ன செய்ய நாட்டுல ஜனநாயகம் செத்து போச்சு :):)