Tuesday, September 30, 2008

வாரணம் ஆயிரம் விமர்சனம்

காக்க காக்க விற்கு பிறகு சூர்யா கவுதம் மேனன் இணையும் படம், சூர்யா வின் கடின உழைப்பு அவர் வரும் ஒவ்வொரு காட்சிகளும் தெரிகிறது.


தமிழ் சினிமாவை உலக அரங்கில் எடுத்து செல்லக்குடிய நல்ல தரமான படம் தான் வாரணம் ஆயிரம். இந்தக்கதையும் இதுவரையில் உலகில் சொல்ல படாத கதை என்பதும் இதற்கு முன் யாரும் எடுக்கவில்லை எனக்கு தெரிந்த வரையில் உண்மை. சரி கதைக்கு செல்வோம்.


தாயில்லாமல் வளரும் முரட்டு வாலிபனும், பொறுப்பு இல்லமால் ராணுவ பள்ளியில் படிக்கும் இளைஞர்களின் திடீரென ஏற்படும் சம்பவங்கள் மற்றும் அதன் பின் விளைவுகளே கதையின் கரு, இரு பாத்திரங்களையும் அழகாக வித்தியாச படுத்தி இருக்கிறார் சூர்யா. குழப்பமான கதையை ரசிகர்கள் ஏற்றுகொள்ளும் வகையில் கொடுத்த கவுதமுக்கு ஒரு 'ஓஹோ' போடலாம்


படத்தின் முதல் காட்சி மருத்துவ மனையில் ஆரமிக்கிறது, கல்லூரி பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகிறது அந்த விபத்தில் படுகாயமடைந்த சூர்யா, ரம்யா இருவரும் மருத்துவ மனையில் செர்க்கபடுகிறார்கள், அதே சமயம் ராணுவ பயிற்சி முகாமில் நடந்த தீவிர வாத தாக்குதில் படுகாய மடைந்த இன்னொரு சூர்யாவும் சேர,இருவரின் வாழ்கை சம்பவங்களை விளக்க கதை பின் நோக்கி சொல்கிறது


தாயில்லாமல் வளரும் ஒரு முரட்டு இளைஞ்சன் வாழ்வில் அன்பு கிடைக்காமல் வளருகிறான்.முரட்டு இளைஞனாக வரும் சூர்யா முரடனாகவே வாழ்ந்து இருக்கிறார்.கல்லூரியில் சேரும் சூர்யா,முதல்வர் சிம்ரனின் கண்டிப்பான நடவடிக்களை கண்டிக்க அவர் வீட்டுக்கு செல்லும் சூர்யா அங்கு காக்கா வலிப்பினால் துடிக்கும் குத்து ரம்யா வைக் காப்பாற்றுகிறார்.


கல்லூரியில் வரலாறிலே மாணவர் தேர்தல் நடந்தது கிடையாது. அதை எப்படியாவது நடத்த வேண்டும் என்ற முயற்சியில் உள்ளூர் தொழில் அதிபர் மகன் முயற்சி செய்கிறார், அதற்காக அவன் எடுக்கும் முயற்சிகளை குத்து ரம்யா சூர்யாவின் உதவியால் முறியடிக்கபடிகின்றன.இதற்குள் அவர்கள் இருவருக்கும் காதல் வந்திருக்கும் என்பதை நான் சொல்ல வேண்டியது இல்லை .

ஏமாற்றம் அடைந்த தொழில் அதிபரும், அவரின் மகனும் சந்தர்பத்தை எதிர் பார்த்து காத்திருக்கையில் கல்லூரி சுற்றுலா வருகிறது, வட இந்தியாவில் உள்ள ரவுடிகளை(தீவிரவாதிகள்) சூர்யாவை கொல்ல செய்ய ஏற்பாடு செய்கிறார்கள். கல்லூரி சுற்றுலா செல்லும் சூர்யா,ராம்யா இருவரும் கொலை செய்ய படுகிறார்கள்.

மருத்துவமனியில் உயிருக்கு போரடிகொண்டிருக்கும் ராணுவ வீரன் சூர்யா விக்கு, இறந்த சூர்யாவின் உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டு உயிர் பிழை கிறார். உயிர் பிழைத்து வரும் சூர்யா பள்ளியில் சேர்ந்து முதல் நடந்தது வரை நினைத்து பார்ப்பது போல கதை சொல்லப்படுகிறது.

ராணுவத்திலே மேஜர் பதவி வகித்தவர் தன் மகனும் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டுமென தன் மகனை ராணுவ பள்ளியில் சேர்த்து விடுகிறார்.அதிலே விருப்ப்பம் இல்லாமல் தந்து காலனியில் காதலி சமீரா ரெட்டி யுடன் நேரத்தை செலவழிக்க பள்ளியில் இருந்து தப்பித்து காதலியை சந்திப்பதே பொழுது போக்காக வைத்திருக்கும் காதல் மாணவன் சூர்யா, காதலர்கள் சந்திக்கும் காட்சிகள் கொள்ளை அழகு.

படித்து முடித்து ராணுவத்திலே இடமும் கிடக்கிறது, ராணவ ரோந்து வரும் வேளையில் சூர்யாவின் வாகனம் தாக்கப்படுகிறது. அதன் பின் நடந்த வற்றை மேலே குறிப்பிட்ட படியினால் , மருத்துவனையில் இருந்து வரும் சூர்யா தனது கடின உழைப்பால் மற்றும் உடற் பயிற்சி மூலம் கமேண்டோ படை வீராகிறார்.

ராணுவத்தின் கெடுபிடி காரணமாக பதுங்க இடம் பெயரும் திவிரவாதிகளுக்கு சூர்யாவை கொலை செய்ததற்க்காக அடைகலம் தருகிறார் தொழில் அதிபரும் அவர் மகனும், அவர்களது தலைவன் கைது செய்யப்படவே,இறந்து போன சூர்யாவின் கல்லூரி திவிரவாதிகளால் முற்றுகை இடப்படுகிறது.

அதை மீட்க அனுப்பும் ராணுவபடையில் சூர்யாவும் இடம் பெறுகிறார். அங்கு சொல்லும் அவர்கள் தீவிர வாதிகளை கொன்று கல்லுரியை மீட்கிறார், தீவிர வாதிகளுக்கு அடைகலம் தந்த உள்ளூர் தொழில் அதிபரையும் அவரின் மகனும் இந்த தாக்குதலில் அவர்களும் இறந்து விடுகிறார்கள்.

சூர்யாவின் சேவையை பாராட்டி அவருக்கு ராணுவத்தின் உயர்ந்த விருது வழங்கி அவர் கவுரவ படுத்தப்படுவதோடு கதை முடிகிறது. கதாநாயகிகள் இருவரும் அவர்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து உள்ளனர் . படத்தின் சிறப்பு அம்சம் எடிட்டிங், சூர்யாவின் கடின உழைப்பு கவுதம் மேனனின் வெற்றி பட வரிசையில் வாரணம் ஆயிரம் இன்னொரு மைல் கல்.நானும் விமர்சனத்திலே இருந்து விடை பெறுகிறேன்முழு படத்தை தியேட்டர்ல பார்த்து விட்டு நீங்க உங்க முடிவை சொல்லலாம்.




22 கருத்துக்கள்:

குடுகுடுப்பை said...

படம் பாக்கனுமா வேண்டாமா? ஒத்தை வரியில சொல்லுங்க நசரேயன்.

அப்புறம் இது உங்க "என் கனவில் தென்பட்டது" இல்லையே

நசரேயன் said...

நிச்சயமா பாக்கலாம் இந்த கதை படமா வந்தால்:):)

Subash said...

//நிச்சயமா பாக்கலாம் இந்த கதை படமா வந்தால்:):)//

adkadavuleeeeeeeee
:))))))

குடுகுடுப்பை said...

யோவ் நசரேயா
என் சினிமா அறிவு உலகம் பூரா தெரிஞ்சு போச்சுய்யா இப்போ.

நசரேயன் said...

/*யோவ் நசரேயா
என் சினிமா அறிவு உலகம் பூரா தெரிஞ்சு போச்சுய்யா இப்போ.*/

வழக்கமா முக்கிய குறிப்பு போடுறது வழக்கம், ஒரு மாறுதலுக்காக விட்டுவிட்டேன் :):)

S.R.Rajasekaran said...

எப்படி இது முடிஉம். இது என் கதை .இதை யார் திருடியது

நசரேயன் said...

/*எப்படி இது முடிஉம். இது என் கதை .இதை யார் திருடியது */

வருகைக்கு நன்றி.. நீங்களும் நானும் ஒரே ஊர் மாதிரி இருக்கே?

Anonymous said...

Nasareyan

Summa unga kathaya ellam eluthi vasagarkala kolappa kudathu. Mothalla padatha pathuttu athanpin vimarsanam eluthavum. Konjam utta enga kathula poo suthiruvinga pola !!!!

நசரேயன் said...

/*
Nasareyan

Summa unga kathaya ellam eluthi vasagarkala kolappa kudathu. Mothalla padatha pathuttu athanpin vimarsanam eluthavum. Konjam utta enga kathula poo suthiruvinga pola !!!!
*/
எதோ என்னால முடிஞ்சது :):)

நசரேயன் said...

/*
//நிச்சயமா பாக்கலாம் இந்த கதை படமா வந்தால்:):)//

adkadavuleeeeeeeee
:))))))
*/
வருகைக்கு நன்றி சுபாஷ்

Anonymous said...

இதுல்ல யாருக்கு அயிறெம் யானை பலம். கற்பனை கதை எழுதின ஆசிரியருக்கா?

நசரேயன் said...

/*இதுல்ல யாருக்கு அயிறெம் யானை பலம். கற்பனை கதை எழுதின ஆசிரியருக்கா?
*/
:)

jaba said...

கதை ரொம்ப நல்லா இருக்கு......

T.V.ராதாகிருஷ்ணன் said...

;-))))

நசரேயன் said...

/*
கதை ரொம்ப நல்லா இருக்கு......*/
வருகைக்கு நன்றி :)

நசரேயன் said...

;-))))
நன்றி ஐயா

Anonymous said...

enna da story ithu....Dinakaran sonna mari film relase agatum da...

unnoda story padichathuku appuram..antha padam pakka mood-e pochu da....

thayayu seithu thalaivar rajini padathuku vimarsanam sollatha...

நசரேயன் said...

/*
enna da story ithu....Dinakaran sonna mari film relase agatum da...

unnoda story padichathuku appuram..antha padam pakka mood-e pochu da....

thayayu seithu thalaivar rajini padathuku vimarsanam sollatha...
*/
வெளி வந்த படத்துக்கு விமர்சனம் எழுதி அலுத்து போச்சு :)

Subash said...

ஃஃ/*எப்படி இது முடிஉம். இது என் கதை .இதை யார் திருடியது */

வருகைக்கு நன்றி.. நீங்களும் நானும் ஒரே ஊர் மாதிரி இருக்கே?ஃஃ


இதான் டாப்புபுபுபுபு
ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி

முரளிகண்ணன் said...

:-))))))))))))))))))

நசரேயன் said...

/*

ஃஃ/*எப்படி இது முடிஉம். இது என் கதை .இதை யார் திருடியது */

வருகைக்கு நன்றி.. நீங்களும் நானும் ஒரே ஊர் மாதிரி இருக்கே?ஃஃ


இதான் டாப்புபுபுபுபு
ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
*/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுபாஷ்

நசரேயன் said...

/*
:-))))))))))))))))))


*/
வருகைக்கு நன்றி முரளிகண்ணன் ..
நீங்க கடத்த கால சினிமாவை சொல்லுறீங்க .. நான் எதிர் கால சினிமாவை சொல்லுறன் :):)