Tuesday, September 23, 2008

வைகை புயலும், கேப்டனும்

அடி தடி போரை நடத்தி அக்கபோரு நடத்தி கொண்டு இருக்கும் தென் பாண்டி சிங்கங்களா, கொஞ்ச நாள் சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு சண்டை போட்டீங்க அதை நாங்க வேடிக்கை பாத்தோம், இப்பவும் நாற்காலி சண்டை தான் உங்க வீட்டுல நாற்காலி உடைஞ்சதுக்காக நீக்க முதல்வர் நாற்காலி வேணுமுன்னு ஒத்த காலிலே நிக்குறீங்க அதையும் நாங்க வேடிக்கை பார்க்கிறோம்.


இதை உங்க பாணியில சொன்ன "என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு". நீங்க சினிமா விலே காமெடி பண்ணுறீங்க,அதனாலே நீங்க சொல்லுற எல்லாத்தையும் நகைசுவையா பாத்து பாத்து, இப்ப நீங்க விடுகிற அறிக்கை எல்லாம் பாத்தா சந்திரமுகி பேய் அடிச்ச குழப்பத்துல நாங்க இருகோம். இதை வச்சி நீங்க காமெடி கீமெடி ஒன்னும் பண்ணலையே.

கேப்டன் அவர்களே சமிப காலமா பத்திரிகைக்கு எல்லாம் தலைப்பு செய்தியா இருந்த நீங்க இப்ப தலை வலி செய்தியால்லா இருக்கீங்க.நீங்க பாகிஸ்தான் பார்டர்ல எதிரிகளை பின்னங்காலலே எட்டி உதைக்கும் போதும் எல்லாம் கைய தட்டி சிரிச்சோம், இப்ப கைய கொட்டி சிரிக்கோம்.

ஊரு ரெண்டு பாட்டால் கூ த்தாடிக்கு கொண்ட்டாட்டம் மாதிரி நீங்க அடிக்கிற கொட்டதாலே என்ன எழுத்தை நினைத்து கொண்டு இருந்த எங்களுக்கும் பொழப்பு ஓடுது.நீங்க உங்க சண்டையை சீக்கிரம் முடிகலைனா, உங்களை பத்தி எழுதி எழுதி எங்க கை ஓடிஞ்சுடும்.
இதை வச்சி கருத்து கிருத்து ஏதும் சொல்லுவானு நினைச்சு யாரும் வந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்ல சாமி


7 கருத்துக்கள்:

Robin said...

நம் நாட்டில் பேசப்படும் நியாயங்கள் விநோதமானவை. ஒருவன் அடிபட்டாலும் அழக்கூடாது. அடித்தவன் செய்த தப்பை விட அடிபட்டவன் அழும் அழுகைதான் பெரிய தவறாக பேசப்படும். அடித்தது விஜயகாந்த் ஆட்கள் அழுவது வடிவேல். இந்நிலையில் வடிவேல் பெரிய தவறு செய்ததுபோல் பலரும் பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது.

Robin said...

விஜயகாந்த் அரசியலில் குதிக்கும்போது வடிவேல் தேர்தலில் போட்டியிடுவேன் என்று சொல்வதில் தவறு என்ன? ஏற்கனவே கூத்தாடிகளின் ஆட்சி தானே தமிழகத்தில் நடக்கிறது. பத்தோடு பதினொன்று. அவ்வளவு தான். காமெடி நடிகன் தானே எவ்வளவு அடித்தாலும் தாங்குவான் என்று விஜயகாந்த் அகங்காரத்துடன் எண்ணியதுதான் இந்த பிரச்சனை இவ்வளவு தூரம் வளர்வதற்கு காரணம்.

Robin said...

விஜயகாந்த் அரசியலில் குதிக்கும்போது வடிவேல் தேர்தலில் போட்டியிடுவேன் என்று சொல்வதில் தவறு என்ன? ஏற்கனவே கூத்தாடிகளின் ஆட்சி தானே தமிழகத்தில் நடக்கிறது. பத்தோடு பதினொன்று. அவ்வளவு தான். காமெடி நடிகன் தானே எவ்வளவு அடித்தாலும் தாங்குவான் என்று விஜயகாந்த் அகங்காரத்துடன் எண்ணியதுதான் இந்த பிரச்சனை இவ்வளவு தூரம் வளர்வதற்கு காரணம்.

நசரேயன் said...

எப்போதுமே தனக்கு கொஞ்சம் பிடித்தவர்களை நிறைய குறை சொல்ல முடியாது. அதுதான் வடிவேலு, விஜய்காந்த் மோதலில் நடந்தது. நீங்கள் சொல்வது உண்மைதான் உண்மை விபரம் தெரியாமல் வடிவேலுவை தாக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டது.

ம்ஹும் .. என்ன செய்ய எல்லாம் எங்க தலை எழுத்து :):):)

Anonymous said...

That is true. We should nto allow the actors to enter into politics.

Dinakaran

குடுகுடுப்பை said...

வடிவேல் மேல் இதில் தவறு இருப்பதாக தோன்றவில்லை. ஆனால் அவரும் எனக்கு போட்டியாக முதல்வர் பதவிக்கான போட்டிக்கு வந்து விடுவாரோ என்ற பயம் என்னையும் அவர் மேல் கோபம் கொள்ள வைக்கிறது.

நசரேயன் said...

குடுகுடுப்பையார் சொல்வது உண்மை. நடந்த சம்பவங்கள் விஜய்காந்து க்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்த கூடாது என்பதற்க்காக பின்னப்பட்ட நூறு சதவித கற்பனை