Monday, August 25, 2008

மீண்டும் பொன்னியின் செல்வன்

நான் எதோ பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எழுத போறதா நினைத்து தலைப்பை பாத்து வந்தா தயவு செய்து வேற பக்கம் போய்டுங்க... இல்லை நேரம் போகலை எந்த கர்மத்தையாவது வாசிக்கலாம்னு நினைச்ச இந்த கர்மத்தை வாசிங்க

(ராஜாதி ராஜா வான ராஜ ராஜ சோழனும் அவரது மகனும் ராஜேந்திர சோழனும் தங்களுடைய சந்ததிகள் எப்படி நாட்டை வழி நடத்துகிறார்கள் என்று பார்வை இட இப் பூமிக்கு மறுபடி வருக்கிறார்கள்


அவர்கள் தம் முப்பாட்டனார் கரிகால சோழன் கட்டிய உலகில மிக பழமையான கல் அணைக்கு வருகிறார்கள், வந்தவர்கள் தங்கள் சம்பாசனைகளை இவ்வித மாக தொடக்குகிறார்கள்)அப்பா நம் பாட்டனார் கட்டிய அணை எவ்வளவு கம்பிராமாக துளி அளவும் சேதம் இல்லாமல் இருக்கிறது


ம்ம்ம்.. நானும் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன்


அப்பா இடை பட்ட கால சுழற்சியில் எவளோவோ மாற்றங்கள் இன்றும் நம் புகழ் பறை சாற்றி கொண்டு இருக்கிறது.நம் மக்களின் வாழ்கை தரம் எவ்வளவோ உயர்ந்து இருக்கிறது


ஏதும் வியப்பாக இல்லை ராஜேந்திரா...நாம் இருந்த காலத்திலேயே இந்த பூங்கா அடர்ந்த காடுபோல இருக்கும், ஆனால் இன்று பூங்கா என்ற பெயரில் ஒரு சில மரங்களை தான் பார்க்க முடிகிறது.இந்த அணையின் நீர்மட்டம் ஒரு நாளும் குறைந்ததில்லை, இப்பொது தண்ணிர் இருபதே தெரிய வில்லை.நாம் குதிரை படைகள்,காலால் படைகள் மற்றும் யானை படைகள் நடந்து செல்ல அமைத்த சாலைகள் அப்படியே இருக்கிறது.மக்களின் நடை உடை பாவனைகளில் இருகின்ற மாற்றம் அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் இல்லை


நானும் கவனித்தேன் அப்பா, ஆனால் உங்களுக்கு நம் மண்ணை குறை பற்றி கூறினால் பிடிகாது எனவே தான் அவைகளை பற்றி பேச வில்லை


ராஜேந்திரா நானும் நீயும் போன பிறகு நம் தாய் மண்ணை தமிழனை விட அயல் நாட்டினரே அதிகமாக ஆட்சி புரிந்துள்ளனர்


அதன் பின் மன்னர் ஆட்சி முடிவுற்று மக்கள் ஆட்சி வந்ததாக கேள்வி


ஆம், இன்று நடப்பது மகள் ஆட்சி தான்.சேர, சோழ, பாண்டியர், சாளுக்கியர், கலிங்கர்,கங்கபாடி,நோலம்பவடி மற்றும் எல்லோரும் சேர்ந்து இந்தியா என்ற நாட்டின் கீழ் இருக்கிறார்கள்


ஒற்றுமையை இருகிறார்களா?


இனம்,மொழி,மதம்,நீர் மற்றும் நிலம் இவைகளை தவிர


ஒற்றுமையில் அங்கம் வகிக்க வேண்டியவைகளே இவைகள் தானே...!!!

மகனே, அணையின் நீர்மட்டம் பற்றி சொன்னேன் அல்லவா, அதற்கு காரணம் இங்கு நடக்கும் இரு மாநில அரசுகளின் உரிமை பிரச்சனை தான்

அப்பா.. நீங்கள் ஆட்சி செய்யும் போதும் கூட இந்த காவிரி நதிக்காக சாளுக்கியர்கள் மீது படை எடுத்து அவர்கள் கொட்டத்தை அடக்கினோம்.அதற்கு சான்றாக நந்தி மலையில் இன்றும் நாம் நிர்மாணித்த கோவில்கள் மற்றும் சிலைகள் உள்ளன. (Nandi ஹில்ல்ஸ் பெங்களூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது)

ம்ம்ம்.. அது பழைய கதை அப்போது அவர்கள் எதிரிகள், இப்போதோ ஒரு எல்லோரும் தாயின் பிள்ளைகள்

அப்படியானால் அவர்கள் சகோதர்கள், சகோதர பாசத்திற்கு முன்னுதாரணமாக தாங்கள் செய்த தியாகத்தை யாரும் எண்ணி பார்க்கவில்லையா?(தனக்கு கொடுத்த அரியணையை தன் பெரியப்பா மகன் உத்தம சோழனுக்கு விட்டு கொடுத்து.மேலும் விவரங்களுக்கு கல்கியின் பொன்னியின் செல்வன் படித்து தெரிந்து கொள்ளளவும்) சகோதர்களுக்குள் ஏன் இந்த பிரச்னை?

சகோதர்களாக தங்களை வெளி காட்டி கொண்டாலும் உண்மைகள் அவர்கள் சகோதரர்களா என்பது யாருக்கு தெரியும்.இதை இவர்களால் மட்டும் மல்ல இவர்களின் தாயினால் கூட தீர்க்க முடிய வில்லை.இவர்களின் பிரச்சனைகளை வருண பகவானும் என்னை சிறு வயதில் காப்பாற்றிய இந்த காவேரி தாயும் தான் தற்காலிகமாக தீர்த்து வைக்கிறார்கள்.

சகோதர்களுக்குள் விட்டு கொடுக்கும் மனப்பான்மையும் சகிப்பு தன்மையும் இல்லாத வரையில் இப் பிரச்சனைக்கு ஒரு முடிவே கிடையாது.

சரியாக சொன்னாய் ராஜேந்திரா.அப்படி இல்லாத பட்சத்தில் நாம் இன்னும் 1000 ஆண்டுகள் கழித்து வந்தாலும் இந்த பிரச்சனை இருக்கும்

அப்பா இதை பற்றி இன்னும் பேசினால் ராஜா ராஜனும் ராஜேந்திரனும் எங்களை குறை சொல்லி விட்டார்கள் என்று "வாட்லாறு நாகராஜ்" மற்றும் கன்னட அமைப்புகள் அங்கு உள்ள நாம் தமிழக மக்களுக்கு தொல்லை தரலாம் வாருங்கள் நாம் நீங்கள் கட்டிய தஞ்சை கோவிலுக்கு போவோம்


1 கருத்துக்கள்:

http://urupudaathathu.blogspot.com/ said...

///ராஜா ராஜனும் ராஜேந்திரனும் எங்களை குறை சொல்லி விட்டார்கள் என்று "வாட்லாறு நாகராஜ்" மற்றும் கன்னட அமைப்புகள் அங்கு இல்ல நாம் தமிழக மக்களுக்கு தொல்லை தரலாம்////


சரியாக சொன்னீர்ர்கள்...

அவர்களுக்கு இதை விட்டால் வேறு பொழப்பு இல்லை..
இதை வைத்து தானே அவர்கள் அரசியலில் காலம் தள்ளி கொண்டு இருகிறார்கள்