Tuesday, January 6, 2009

காதல் கடிதம்

அன்புள்ள தமிழ்வாணனுக்கு,

கல்லுரியின் இறுதி நாளில் நிற்கும் நாம் இந்த முன்று வருடங்கள் உதட்டில் இருந்து ஆயிரம் வார்த்தைகள் பேசிஇருக்கலாம், ஆனால் நாம் உள்ளம் பேசிய வார்த்தைகளை விரிவாக எழுத முன்று யுகங்கள் போதாது என்பதை நான் அறிவேன்.

எதற்கும் பிந்துகிற நான் இந்த மடல் விசயத்தில் முந்த வேண்டும் என்பதகாகவும், என் உள்ளத்தில் மொட்டாய் மூடியிர்ந்த உணர்ச்சி வெள்ளம் மலராய் மலர்ந்து விட்டது என்பதை வெளிபடுத்தவும் இந்த நல்ல வாய்ப்பை பயன் படுத்த விரும்பினேன்.

நாம் உலகிற்கு நட்புரிமை பாராட்டினாலும் நாம் உள்ளத்தின் உரிமையை நாமே அறிவோம். சில சமயம் அந்த அகத்தின் உணர்வை தெரிந்து கொண்ட நம் நண்பர்கள் உன்னையும் என்னையும் இணைத்து பேசும் போதும் அதை நான் ரசித்ததை விட இந்த உலகத்திலே மேலான காரியம் ஒன்றும் இல்லை.

இந்த கல் நெஞ்சில் கள்வனாய் நுழைந்து காதல் என்னும் மந்திரம் ஓதி,கல் போல் இருந்த என் மனம் பால் ஆனது . கடுகு போல நுழைந்த நீ கடல் போல் விஸ்வருபம் ஆனாய்.

நீ எனக்குள் இருக்கும் ஆனந்தத்தில் என்மனமும் பஞ்சு போல மிதந்து வானம் சென்று அங்கு உள்ள நட்சத்திரங்களை அழைத்து வந்து மனதிற்குள் பறக்க விட்டது.

காதல் ஒரு கானல் நீர் என்று பலமுறை பெரியவர்கள் ௬றும் போது இது அவர்களின் இயலாமை என் நினைத்த நான், இப்போது நான் அறிந்த உண்மையை உங்களுக்கும் உணர்த்த வேண்டும்..

கானல் நீர் அழகானது அதை பார்த்து ரசிக்கலாம், ஆனால் அதை பருகி நாம் தாகம் தீர்க்க முடியாது என்பதை மறுக்க முடியாது.அதை போல் இந்த கல்லுரி காதல் நம் வாழ்கை தாகத்தை தீர்க்க முடியாது

கல்லூரி காதலை நடமுறைக்கு ஒப்பிட்டால் அது எட்டு சுரக்காய் போன்றது அது கறிக்கு உதவாததை போல இந்த காதலும் வாழ்கைக்கு உதவாது என்பதையும் புரிந்து கொண்டேன்.

கல்லூரியில் பயிலும் போது காதல் செய்வதை பெருமையாக நினைக்கும் இளைஞர்களுக்கு நாமும் விதி விலக்குஅல்ல. அதுவே நாம் தலை விதியும் அல்ல என்பது உண்மை.காதல் ஒரு அத்தியாயம் வாழ்கையில் என்பது எனக்கு தெரிந்து விட்டது

வாழ்கையின் உண்மையை வெளிச்சம் இட்டு காட்டியது எனக்கு கிடைக்க போகும் எதிர்கால மண வாழ்க்கை. அதுவே இது நாள்வரையில் உண்மை என நம்பி கனவுலகில் சஞ்சரித்து இருப்பதை அடி கோடிட்டு காட்டியது.ஆம் எனக்கு திருமணம் நிச்சயிக்க பட்டு விட்டது அமெரிக்க மணமகன் என் கணவன் ஆக போகிறார், திருமணம் முடிந்து அவருடம் அமெரிக்க செல்ல இருக்கிறேன்.

இந்த மடலின் ஆரம்பத்திலே தங்களுக்கு மகிழ்ச்சி தரும் விசயங்களை கூறிய நான் இந்த உண்மையும் சொல்லவேண்டிய கட்டாயம், இது உங்களுக்கு கசப்பை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நாம் காதல் கனவு அத்தியாத்தின் முடிவில் எனக்கு ஒரு நல் வாழ்வு ஆரம்பமாகிறது.இதே ஆரம்பம் வரைவில் நீங்களும் அடைய வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்.


அன்புடன்,

தாமரை செல்வி.


முக்கிய குறிப்பு: பின் புறத்தில்....தயவு செய்து வாசிக்கவும்.

பின் புறத்தில்: இந்த மடல் முலம் என் மனதை திரையிட்டு கட்டியதால், என் வரிகளால் என் எதிர் கால வாழ்க்கைக்கு எந்த வித பாதிப்பும் வரகூடாது என்பதற்க்காக, இதை படித்து உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் சிந்தி அதிலே ஒரு செட்டு இந்த மடலின் விழுந்தாலும் இதில் உள்ள அத்தனை எழுத்துகள் அழிந்து விடும்.

ம்ம்... நீங்கள் மிகவும் அழுதகாரர் என்பது எனக்கு தெரியும்,உங்களிடம் மருந்திற்கு கூட கண்ணீர் இல்லை என்பதும் எனக்கு தெரியும். நீங்களும் நானும் பகிர்ந்து கொள்ள இது பரஸ்பர கடிதம் அல்ல, வெண் பாஸ்பரஸ் தடவ பட்ட கடிதம், இதை முடிக்கு முன்...


(கடிதம் முழுவதும் எரிந்து சாம்பலானது, அது எரியும் பொது தமிழ் வாணன் கையும் சுட்டது. சாம்பலானது கடிதம் மட்டுமல்ல அவன் இதய கோட்டையும் தான். சுட்டது அவன் கைமட்டு மில்லாமல் அவன் மனதும் தான்.)


30 கருத்துக்கள்:

முரளிகண்ணன் said...

இது புனைவா? இல்லை பயொபிக்ஷனா?

குடுகுடுப்பை said...

பாஸ்பரஸ் கடிதமா?

குடுகுடுப்பை said...

காதல்னா என்னா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

என்ன நசரேயன் இது? வர வர சரவணகுமாருக்கு போட்டியா எழுத ஆரம்பிச்சுட்டீங்க?

mvalarpirai said...
This comment has been removed by the author.
mvalarpirai said...

Kanavula kooda oru niyayam venam ! :)

mvalarpirai said...

athu enna america mappillai-na, enna avalu elakarama ! neenga love pannuveenga kadisiya avan thalila katideevanagala!

Aero said...

nalla narration... tamilvananai paraka vidara parakka vittutu kadasilu mannukullara kayuthutiya da.......

சின்னப் பையன் said...

சரி சரி. ஃப்ளாஷ்பேக்கெல்லாம் இப்பத்தான் ஒண்ணொண்ணா வெளியே வருது போல....

சந்தனமுல்லை said...

:-)))..உவமையெல்லாம் சூப்பர்! நசரேயன் ஆட்டோகிராப்பா? அப்புறம் சியின்ஸ் பிச்ஷன் மாதிரி இருக்கு படிக்க! ஜாலியா இருந்த்டு படிக்க...கடுகு,கடல்,கானல்நீர்ன்னு!

பழமைபேசி said...

உள்ளிருக்கிற படைப்பாளி வெளில வர்றாரு..... வரட்டும், வரட்டும்... இன்னும், இன்னும்...

RAMYA said...

//
நாம் உலகிற்கு நட்புரிமை பாராட்டினாலும் நாம் உள்ளத்தின் உரிமையை நாமே அறிவோம். சில சமயம் அந்த அகத்தின் உணர்வை தெரிந்து கொண்ட நம் நண்பர்கள் உன்னையும் என்னையும் இணைத்து பேசும் போதும் அதை நான் ரசித்ததை விட இந்த உலகத்திலே மேலான காரியம் ஒன்றும் இல்லை.

//


அப்பாடா கொஞ்சம் கொஞ்சமாக
எல்லா உண்மையும் வெளிச்சத்துக்கு
வருது, சரி காத்திருப்போம்
இன்னும் என்ன என்ன
பீதியை கிளப்பபோராரோ
பாக்கலாம்

RAMYA said...

பாஸ்பரஸ் கடிதமா இதெல்லாம் கூடவா?

எல்லாமே முடிஞ்சி போச்சா
சரி சரி

தமிழன்-கறுப்பி... said...

காதல்னா என்ன அங்கிள்...:)

நசரேயன் said...

/*
இது புனைவா? இல்லை பயொபிக்ஷனா?
*/
புனைவு தான்

நசரேயன் said...

/*காதல்னா என்னா?
*/
தெரியலையே

/*
பாஸ்பரஸ் கடிதமா?
*/
வெண் பாஸ்பரஸ் கடிதம்

நசரேயன் said...

/*
என்ன நசரேயன் இது? வர வர சரவணகுமாருக்கு போட்டியா எழுத ஆரம்பிச்சுட்டீங்க?
*/
போட்டியெல்லாம் இல்ல ஐயா

நசரேயன் said...

/* mvalarpirai said...
Kanavula kooda oru niyayam venam ! :)



mvalarpirai said...
athu enna america mappillai-na, enna avalu elakarama ! neenga love pannuveenga kadisiya avan thalila katideevanagala!
*/
வாங்க வளர்பிறை, எல்லாம் கனவு தானே

நசரேயன் said...

/*
nalla narration... tamilvananai paraka vidara parakka vittutu kadasilu mannukullara kayuthutiya da.......
*/
என்ன செய்ய தலை விதி

நசரேயன் said...

/*
சரி சரி. ஃப்ளாஷ்பேக்கெல்லாம் இப்பத்தான் ஒண்ணொண்ணா வெளியே வருது போல....
*/
ஆமா

நசரேயன் said...

/*
:-)))..உவமையெல்லாம் சூப்பர்! நசரேயன் ஆட்டோகிராப்பா? அப்புறம் சியின்ஸ் பிச்ஷன் மாதிரி இருக்கு படிக்க! ஜாலியா இருந்த்டு படிக்க...கடுகு,கடல்,கானல்நீர்ன்னு!
*/

ஆட்டோ வராம இருந்தா சரிதான்

நசரேயன் said...

/*
அப்பாடா கொஞ்சம் கொஞ்சமாக
எல்லா உண்மையும் வெளிச்சத்துக்கு
வருது, சரி காத்திருப்போம்
இன்னும் என்ன என்ன
பீதியை கிளப்பபோராரோ
பாக்கலாம்
*/
பூலான் தேவிக்கு பீதியா?

நசரேயன் said...

/* தமிழன்-கறுப்பி... said...
:)

தமிழன்-கறுப்பி... said...
காதல்னா என்ன அங்கிள்...:)
*/

வாங்க தமிழன்-கறுப்பி
காதல்னா என்னன்னு எனக்கும் தெரியலை

Anonymous said...

வித்தியாசமா இருக்கு...:)

Anonymous said...

//ம்ம்... நீங்கள் மிகவும் அழுதகாரர் என்பது எனக்கு தெரியும்,உங்களிடம் மருந்திற்கு கூட கண்ணீர் இல்லை என்பதும் எனக்கு தெரியும். நீங்களும் நானும் பகிர்ந்து கொள்ள இது பரஸ்பர கடிதம் அல்ல, வெண் பாஸ்பரஸ் தடவ பட்ட கடிதம், இதை முடிக்கு முன்... //

ஹும். இத படிச்சதும் எதோ ஒரு கமல் படம் ஞாபகம் வருது. கல்லூரி வயசுல வருறது காதல் இல்லை. மோகம் அண்ட் காமம். கொஞ்சம் வயசான பிறகு நனைச்சி பார்த்தா சிரிப்புதான் வரும். ஒரு ௨௫க்கு மேல வருறது தான் உண்மையான காதல். அது நிலைக்கும். பிரிந்தால் தாடியும் பீடியும் தான் மிஞ்சும். என்ன நான் சொல்லுறது. சரிதானே. எதாவது எதிர் வாதம்?

Anonymous said...

Spelling corrected version.

//ம்ம்... நீங்கள் மிகவும் அழுதகாரர் என்பது எனக்கு தெரியும்,உங்களிடம் மருந்திற்கு கூட கண்ணீர் இல்லை என்பதும் எனக்கு தெரியும். நீங்களும் நானும் பகிர்ந்து கொள்ள இது பரஸ்பர கடிதம் அல்ல, வெண் பாஸ்பரஸ் தடவ பட்ட கடிதம், இதை முடிக்கு முன்... //

ஹும். இத படிச்சதும் எதோ ஒரு கமல் படம் ஞாபகம் வருது. கல்லூரி வயசுல வருறது காதல் இல்லை. மோகம் அண்ட் காமம். கொஞ்சம் வயசான பிறகு நினைச்சி பார்த்தா சிரிப்புதான் வரும். ஒரு 25க்கு மேல வருறது தான் உண்மையான காதல். அது நிலைக்கும். பிரிந்தால் தாடியும் பீடியும் தான் மிஞ்சும். என்ன நான் சொல்லுறது. சரிதானே. எதாவது எதிர் வாதம்?

Anonymous said...

//முக்கிய குறிப்பு :பம்பாய் படத்தின் தாக்கத்தால் எழுதிய காதல் கடிதமும் அதன் விளைவும் அடுத்த பாகத்தில்.//

இந்த காதல் கடிதம் பதிவு எப்ப வரும்?. படிக்க, வீட்டுல போட்டு குடுக்க ரொம்ப ஆவல். சீக்கிரம் பதிவை போடவும்.

Anonymous said...

நல்லாத்தான் இருக்கு என் பெயர் போல.

நசரேயன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தூயா மற்றும் வில்லன்

Anonymous said...

// நசரேயன் said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தூயா மற்றும் வில்லன்//

எதுக்கு என்ன உட்டுடிக. ஏன் இந்த ஓரவஞ்சனை